உள்ளடக்கத்துக்குச் செல்

சிசு நாகேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசு நாகேந்திரன்
பிறப்பு(1921-08-09)9 ஆகத்து 1921
கேகாலை, இலங்கை
இறப்புபெப்ரவரி 10, 2020(2020-02-10) (அகவை 98)
சிட்னி, ஆத்திரேலியா
தேசியம்இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
அறியப்படுவதுநாடகக் கலைஞர், எழுத்தாளர்
பெற்றோர்சின்னம்மாள்
சுந்தரம்பிள்ளை
விருதுகள்மாருதி விருது

சிசு நாகேந்திரன் (ஆகத்து 9, 1921 - பெப்ரவரி 10, 2020) இலங்கையில் திரைப்படங்கள் மூலமும், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமும் அறியப்பட்ட பல்துறைக் கலைஞர், எழுத்தாளர், ஆய்வாளர். அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் சக்கடத்தார் இராஜரத்தினத்துடன் இணைந்து எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை வழங்கியவர். நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து, இலண்டனிலும், பின்னர் அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இலங்கையில் மலையகத்தில் பணிபுரிந்த மருத்துவர் சுந்தரம்பிள்ளைக்கும், சின்னம்மாளுக்கும் இரண்டாவது மகனாக கேகாலையில்[1] பிறந்தவர் சிசு நாகேந்திரன். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இலண்டன் மற்றிக்குலேசன் வகுப்பு வரை படித்தார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளிலும் கற்றுத் தேறினார்.

1944 இல் இலங்கை அரச சேவையிலே சேர்ந்து, சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி, 1979 இல் இளைப்பாறினார்.[2]

இவர் எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம் என்னும் நூல் யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் ஆவணங்களுள் முக்கியமானதாகும்.

நாடகக் கலைஞர்

[தொகு]

கொழும்பில் 'ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்' நடத்திய பல நாடகங்களில் இவர் பங்கேற்றார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து 'சக்கடத்தார்' நாடகத்தில் நடித்தார். இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியது. நாடகக் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் போன்றோருடன் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் நடித்துள்ளார்.[3]

நடித்த நாடகங்களில் சில

[தொகு]
  • சக்கடத்தார்
  • ஆச்சிக்குச் சொல்லாதே
  • வா கோட்டடிக்கு
  • கவலைப்படாதே
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
  • அவமானம்
  • ஊர் சிரிக்குது
  • அது அப்ப - இது இப்ப
  • திருநாவுக்கரசுவின் 'இனி என்ன கலியாணம்'
  • கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை' கவிதை நாடகம்
  • 'சிறாப்பர் குடும்பம்' (வானொலி நாடகம்)
  • 'லண்டன் கந்தையா' (வானொலி நாடகம்)

இவற்றை விட இலண்டனில் தாசீசியசின் 'களரி' நாடக மன்றத்தில் இணைந்து 'புதியதொரு வீடு', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்' ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார்..[3]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • அந்தக்காலத்து யாழ்ப்பாணம், 2004, வெளியீடு: கலப்பை, சிட்னி
  • பிறந்த மண்ணும் புகலிடமும்
  • பழகும் தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி, தமிழ் - ஆங்கிலம் (2015)

விருதுகள்

[தொகு]
  • 'கலைவளன்' பட்டம் (இலண்டனில்)
  • ஆத்திரேலியக் கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மாருதி விருது[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கலைவளன் சிசு. நாகேந்திரன் – வயது 97[தொடர்பிழந்த இணைப்பு], லெ. முருகபூபதி, பெப் 8, 2018
  2. எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது, லெ. முருகபூபதி, ஆகத்து 12, 2015
  3. 3.0 3.1 ஓர் இலக்கியச் சர்ச்சை, ஷம்மிக்கா, வல்லினம், இதழ் 35, நவம்பர் 2011
  4. "மாருதி விருது 2013". தமிழ் அவுஸ்திரேலியன். 23 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசு_நாகேந்திரன்&oldid=4043584" இலிருந்து மீள்விக்கப்பட்டது