மாருதி விருது
மாருதி விருது | |
---|---|
விளக்கம் | தமிழ் மொழியினதும் தமிழ் சமுதாயத்தின் உயர்விற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றியவரிற்கு அல்லது சமூக மேம்பாட்டிற்காக முன்னின்று உழைத்தவரிற்கு அல்லது தமிழர்கள் பெருமைப்படத்தக்க வகையில் சாதனை நிகழ்த்தியவரிற்கு வழங்கப்படுகிறது.. |
நாடு | ஆத்திரேலியா |
வழங்குபவர் | ஆத்திரேலியக் கம்பன் கழகம் |
முதலில் வழங்கப்பட்டது | 2012 |
மாருதி விருது என்பது ஆத்திரேலியக் கம்பன் கழகம் தமிழ் மொழியினதும் தமிழ் சமுதாயத்தின் உயர்விற்காகவும் தன்னலமற்ற சேவையாற்றியவரிற்கு அல்லது சமூக மேம்பாட்டிற்காக முன்னின்று உழைத்தவரிற்கு அல்லது தமிழர்கள் பெருமைப்படத்தக்க வகையில் சாதனை நிகழ்த்திய ஆத்திரேலியத் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கும் ஒரு விருது ஆகும்.[1]
ஆத்திரேலியா வாழ் தமிழ் மக்களிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் இவ்விருதுக்கான தேர்வு நடைபெறுகின்றது. தேர்வு செய்யப்படுபவர்கள் ஆண்டு தோறும் சிட்னி நகரில் நடைபெறும் ஆத்திரேலியக் கம்பன் விழாவில் மாருதி விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறார்கள். இவ்விருது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.[2]
மாருதி விருது பெற்றவர்கள்
[தொகு]- 2012: வைரமுத்து மனமோகன் (இதய மருத்துவ நிபுணர், சிட்னி)[3][4]
- 2013: சிசு நாகேந்திரன் (நாடகக் கலைஞர், மெல்பேர்ன்)[5][6]
- 2014: நா. மகேசன் (எழுத்தாளர், நாடகக் கலைஞர், சமூக சேவையாளர், சிட்னி)[7][8]
- 2015: கந்தசாமி நல்லசிவம், சமூக சேவையாளர், பேர்த், மேற்கு ஆஸ்திரேலியா[9]
- 2016: க. நடனச்சந்திரன், மூளை நரம்பியல் நிபுணர், கான்பரா
- 2017: வழங்கப்படவில்லை
- 2018: ஜெயசிங்கம் ஜெயமோகன், புற்றுநோய் கதிரியக்கச் சிகிச்சை நிபுணர், சமூக சேவையாளர், நாடக நடிகர், சிட்னி
சான்றோர் விருது
[தொகு]அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் ஆண்டு தோறும் மாருதி விருதுடன் நான்கு சான்றோர் விருதுகளையும் வழங்கி வருகிறது. சான்றோர் விருது பெற்றவர்கள் வருமாறு:[2]
- 2012:[3]
- கலாநிதி பொன். பூலோகசிங்கம்
- எஸ். பரம் தில்லைராஜா
- எஸ். பொன்னுத்துரை
- மருத்துவ கலாநிதி பொன். சத்தியநாதன்
- 2013:[5]
- 'மிருதங்க வித்துவான்' ஆ. சந்தானகிருஷ்ணன்
- கவிஞர் இ. அம்பிகைபாகர்,
- திருமதி பாலம் இலட்சுமணன்
- ஓவியர் ஆசைப்பிள்ளை ஞானசேகரம்
- 2014:
- திருமதி இராஜேஸ்வரி சந்திரசேகரம்
- சட்ட அறிஞர் சிவானந்தன்
- திருமதி. பத்மாவதி அருமைநாயகம்
- மருத்துவர் ஆர். எஸ். முத்துக்கிருஷ்ணன்
- 2015:
- திருமதி புஷ்பராணி தங்கராஜா
- மருத்துவர் 'மறையூர்' சுந்தரேச இராமநாதன்
- இலகுப்பிள்ளை விஜயரத்தினம்
- செல்லையா வேலுப்பிள்ளை
- 2016:
- கலாநிதி திருமதி ஞானா குலேந்திரன்
- கலாநிதி கந்தையா கணேசலிங்கம்
- இளமுருகனார் பாரதி
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா
- 2017:
- வண. நிர்மலேசுவரக் குருக்கள்
- மதியாபரணம் ரவிச்சந்திரா OAM
- இரத்தினசபாபதி சுதந்திரராஜ்
- 2018:
- அன்பு ஜெயா
- செல்வரத்தினம் ஜெயேந்திரகுமார்
- மயில்வாகனம் தனபாலசிங்கம்
- மருத்துவ கலாநிதி அப்புப்பிள்ளை பாலசுப்ரமணியம் OAM
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil festival preserves ancient culture". Parramatta Sun. 5 ஆகத்து 2014. Archived from the original on 2016-07-04. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2016.
- ↑ 2.0 2.1 "Kamban Kazhagam Australia's 10th Year Celebrations". The Indian Sun. 26 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 3.0 3.1 "கம்பன் விழா 2012இல் மாருதி விருது மற்றும் சான்றோர் விருது பெற்ற விருதாளர்கள்". தமிழ்முரசு. 29 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2014.
- ↑ Maaruthi2012
- ↑ 5.0 5.1 "மாருதி விருது 2013". தமிழ் அவுஸ்திரேலியன். 23 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Maaruthi2013
- ↑ "சிட்னிக் கம்பன் விழா 2014". தமிழ்முரசு ஆத்திரேலியா. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Maaruthi2014
- ↑ Maaruthi2015