உள்ளடக்கத்துக்குச் செல்

ஞானம் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவியர் ஞானம் என்று அழைக்கப்படும் ஞானசேகரம் ஈழத்தின் பிரபல ஓவியர் ஆவார். இலங்கையின் பிரபல்யமான நிறுவனங்களுக்கு விளம்பர அமைப்புகள், புத்தக முகப்பு ஓவியங்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான முகப்புகள் முதலியவற்றை ஸ்கிறீன் முறையில் அச்சிட்டு வழங்கியவர்.

தற்போது அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து சிட்னியில் வசித்து வரும் இவர், இந்ததுறையில் அயராமல் உழைப்பவர். இலக்கிய நூல்கள், மலர்கள், சஞ்சிகைகளுக்கும் முகப்பு ஓவியங்களை வரைந்து வருகின்றார்.

இலங்கையில் நில அளவைத் திணைக்களத்தில் 25 ஆண்டு காலம் பட வரைஞராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் "ஞானம் ஆர்ட்ஸ் அண்ட் அட்வர்ட்டைசிங்" என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தம்பணியைத் தொடர்ந்தார். சிலகாலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பகுதிநேர படவரைவுக்கலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அறிஞர்கள், மேதைகள், கல்விமான்கள், கலைஞர்களின் உருவப்படங்களையும் வரைந்து பாராட்டுப் பெற்றவர். 2006 இல் சிட்னியில் நடைபெற்ற உலக சைவ மாநாட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களினதும் உருவப்படங்களை வரைந்து பாராட்டைப் பெற்றவர்.

விருதுகள்

[தொகு]

சித்திரச் செல்வன், சித்திரகேசரி, ஓவிய வித்தகர் முதலான சிறப்புப் பட்டங்கள் பெற்றவர். நியூ சவுத் வேல்ஸ் மாநில பாங்க்ஸ்டவுண் ஆர்ட் சொசையிட்டியின் வருடாந்த விருதும் (2002) பெற்ற கலைஞர்.

ஓவியங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானம்_(ஓவியர்)&oldid=4043588" இலிருந்து மீள்விக்கப்பட்டது