லெ. முருகபூபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெ. முருகபூபதி
L. Murugapoopathy.jpg
பிறப்புசூலை 13, 1951 (1951-07-13) (அகவை 70)
நீர்கொழும்பு, இலங்கை
இருப்பிடம்மெல்பேர்ன், ஆத்திரேலியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

லெ. முருகபூபதி (பிறப்பு: சூலை 13, 1951, நீர்கொழும்பு, இலங்கை) 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகாவித்தியாலத்திலும் கல்விகற்றார்.

1977ல் இலங்கையின் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985ல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

1987ல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பன எழுதியும் வெளியிட்டும் வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடாத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர் 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம இணைப்பாளராகச் செயற்பட்டார்.

வெளியான நூல்கள்[தொகு]

 • சுமையின் பங்காளிகள் (சிறுகதைகள், 1975)
 • சமாந்தரங்கள் (சிறுகதைகள், 1986)
 • சமதர்ம பூங்காவில் (பயண இலக்கியம், 1990)
 • நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (நினைவுகள், 1995)
 • வெளிச்சம் (சிறுகதைகள்)
 • எங்கள் தேசம் (சிறுகதைகள்)
 • பறவைகள் (நாவல்)
 • பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்)
 • இலக்கிய மடல் (கட்டுரைகள்)
 • சந்திப்பு (நேர்காணல்)
 • இலங்கையில் பாரதி (ஆய்வு)
 • கடிதங்கள் (கடிதங்கள்)
 • மல்லிகை ஜீவா நினைவுகள் (நினைவுகள், 2001)
 • ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் (நினைவுகள்)
 • சொல்ல மறந்த கதைகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெ._முருகபூபதி&oldid=2484579" இருந்து மீள்விக்கப்பட்டது