சிங்கப்பூர் மக்கள் தொகையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கப்பூர் மக்கள் தொகையியல் (Demographics of Singapore) என்பது சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகையையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, இனம், கல்வி நிலை, மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை, மதச் சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்தான அலசலையும் குறிக்கின்றது.

2012 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் இத் தீவின் மக்கள் தொகை 5.31 மில்லியன்களாக காணப்பட்டது.[1] இதுவே மொனாக்கோவிற்கு அடுத்தபடியாக, உலகில் அதிக சனத்தொகை அடர்த்தி கொண்ட தன்னாட்சி மிக்க நகர-அரசு ஆகும். சிங்கப்பூர் ஒரு பல்லின, பல்கலாசாரங்களைக் கொண்ட நாடாகும். இந்நாட்டின் மக்கள் தொகை பெரும்பான்மையாக சீனர்களையும் (75.9%), அடுத்த படியாக ஒரு கணிசமான அளவு மலேயர்களையும் (12.1%) மற்றும் சிறுபான்மை இந்தியர்களையும் (9.1%) கொண்டுள்ளது.[2] மேலும் ஐரோப்பிய, ஆசிய வம்சாவளி மக்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு மலாயர்கள் தான் உள்நாட்டு சமூகமாகக் கருதப்படுகிறார்கள். இவர்களில் அநேகமானோர் 1945 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தோனேசியாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்த மக்களின் வம்சாவளியினராவர் .[3][4][5][6]

இங்கு பரவலாக மகாயான பௌத்த மதம் பின்பற்றப்பட்டாலும், இதைப் பெரும்பான்மைச் சமயமாகக் கருதமுடியாது. கணிசமான அளவு மக்கள் இசுலாம், கிறித்துவம், இந்து சமயம், சீக்கியம், நாத்திகம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுபவர்கள். வருடாந்த மொத்த சனத்தொகை வளர்ச்சி வீதம் 2012 ஆம் வருடம் சுமார் 2.5% ஆகப் பதியப்பட்டது. [7]

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய் மொழி ஆகும். மேலும் ஆங்கிலம், மாண்டரின் மொழி, தமிழ் மொழி ஆகியன உத்தியோகபூர்வ மொழிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில மொழி மிக முக்கியமான மொழியாகக் கருதப்படுவதோடு பாடசாலைகளில் கட்டாய மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றது.[8][9]

சிங்கப்பூர் மக்கள் தொகையின் முழு கருவள வீதம் (total fertility rate) 2011 ஆம் ஆண்டில் 1.2 ஆக காணப்பட்டது. சீனர்கள், மலேயர்கள் மற்றும் இந்தியர்களின் கருவள வீதம் முறையே 1.08, 1.64 மற்றும் 1.09 ஆக பதியப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் படி, மலேயர்களின் கருவள வீதமானது சீனர்கள் மற்றும் இந்தியர்களின் கருவள வீதத்தை விட 70% அதிகமாக காணப்பட்டது. [10] சிங்கப்பூர் தனது நாட்டின் கருவள வீதத்தினை 2.1 ஆக அதிகரிப்பதற்குப் பல வருடங்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.[2]

சனத்தொகை[தொகு]

சிங்கப்பூர் மக்கள் தொகை அளவும் வளர்ச்சியும்[7]
Demographics of Singapore, Data of FAO, year 2005 ; Number of inhabitants in thousands.

5,076,700 - 2010 est. Source: World Bank, World Development Indicators

வருடம் இலக்கம் (ஆயிரங்கள்) வளர்ச்சி பரப்பளவு (km2) சனத்தொகை அடர்த்தி (persons per km2)
மொத்த மக்கள் மொத்த குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் மக்கள் நிரந்தர குடியிருப்பாளர்கள் குடியிருப்பாளர் அல்லாதவர் மொத்த மக்கள் மொத்த குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் மக்கள் நிரந்தர குடியிருப்பாளர்கள் குடியிருப்பாளர் அல்லாதவர்
1990 3,047.1 2,735.9 2,623.7 112.1 311.3 2.3% 1.7% 1.7% 2.3% 9.0% 4,706
2000 4,027.9 3,273.4 2,985.9 287.5 754.5 2.8% 1.8% 1.3% 9.9% 9.3% 5,900
2006 4,401.4 3,525.9 3,107.9 418.0 875.5 3.2% 1.7% 0.9% 8.1% 9.7% 6,292
2007 4,588.6 3,583.1 3,133.8 449.2 1,005.5 4.3% 1.6% 0.8% 7.5% 14.9% 6,508
2008 4,839.4 3,642.7 3,164.4 478.2 1,196.7 5.5% 1.7% 1.0% 6.5% 19.0% 6,814
2009 4,987.6 3,733.9 3,200.7 533.2 1,253.7 3.1% 2.5% 1.1% 11.5% 4.8% 7,022
2010 5,076.7 3,771.7 3,230.7 541.0 1,305.0 1.8% 1.0% 0.9% 1.5% 4.1% 710.4 7,126
2011 5,183.7 3,789.3 3,257.2 532.0 1,394.4 2.1% 0.5% 0.8% -1.7% 6.9% 712.7 7,257
2012 5,312.4 3,818.2 3,285.1 533.1 1,494.2 2.5% 0.8% 0.9% 0.2% 7.2% 715.1 7,429
2013 5,399.2 3,844.8 3,313.5 531.2 1,554.4 1.6% 0.7% 0.9% -0.3% 4.0% 716.1 7,540
2014
[11][12]
5,469.7 3,870.7 3,343.0 527.7 1,599.0 1.3% 0.7% 0.9% -0.7% 2.9% 718.3 7,615
குடியிருப்பாளர்களின் பால் ரீதியான கலப்பு[7][12]
வருடம் 1990 2000 2008 2009 2010 2011 2012 2013 2014
மொத்தம் 2,735.9 3,273.4 3,642.7 3,733.9 3,771.7 3,789.3 3,818.2 3,844.8 3,870.7
ஆண் 1,386.3 1,634.7 1,802.0 1,844.7 1,861.1 1,868.2 1,880.0 1,891.5 1,902.4
பெண் 1,349.6 1,638.7 1,839.7 1,889.1 1,910.6 1,921.1 1,938.2 1,953.2 1,968.3
பால் விகிதம் (1,000 பெண்களுக்கு ஆண்கள்) 1,027 998 980 976 974 972 970 968 967
குடியிருப்பாளர்களின் வயதுப் பரம்பல் [7]
வயதுப் பிரிவு (ஆண்டு) 1990 2000 2010 2011 2012 2013 2014
15 இற்கு கீழ் 23.0% 21.9% 17.4% 16.8% 16.4% 16.0% 15.7%
15 – 24 16.9% 12.9% 13.5% 13.6% 13.7% 13.6% 13.2%
25 – 34 21.5% 17.0% 15.1% 14.8% 14.4% 14.4% 14.4%
35 – 44 16.9% 19.4% 16.7% 16.4% 16.3% 16.1% 16.0%
45 – 54 9.0% 14.3% 16.6% 16.7% 16.5% 16.4% 16.1%
55 – 64 6.7% 7.2% 11.7% 12.4% 12.7% 13.1% 13.4%
65 இற்கு மேல் 6.0% 7.2% 9.0% 9.3% 9.9% 10.5% 11.2%
இடை வயது (ஆண்டு) 29.8 34.0 37.4 38.0 38.4 38.9[12] 39.3[12]

சனத்தொகை வளர்ச்சியும் கட்டுப்பாடும்[தொகு]

பிறப்புவீதம், இறப்புவீதம் [7][12]
வருடம் 1950 1955 1960 1965 1970 1975 1980 1985 1990 1995 2000 2005 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014
மொத்த பிறப்புக்கள் 45,934 41,217 51,142 46,997 39,826 39,570 37,967 39,654 42,663 39,720 42,232
குடியிருப்பாளர்களின் பிறப்புக்கள் N.A. 40,100 49,787 44,765 35,129 36,178
பிறப்புவீதம் (1000 குடியிருப்பாளர்களுக்கு) 45.4 44.3 37.5 29.5 22.1 17.7 17.6 16.6 18.2 15.6 13.7 10.2 10.3 10.3 10.2 9.9 9.3 9.5 10.1 9.3 9.8
மொத்த கருவள வீதம் (ஒரு பெண்ணிற்கு) N.A. N.A. 5.76 4.66 3.07 2.07 1.82 1.61 1.83 1.67 1.60 1.26 1.28 1.29 1.28 1.22 1.15 1.20 1.29 1.19 1.25
மொத்த இனப்பெருக்க வீதம் (ஒரு பெண்ணிற்கு) N.A. N.A. 2.78 2.27 1.49 1.00 0.88 0.78 0.88 0.80 0.76 0.61 0.62 0.62 0.62 0.59 0.56 0.58 0.62 0.57 0.61
நிகர இனப்பெருக்க வீதம் (ஒரு பெண்ணிற்கு) N.A. N.A. 2.54 2.08 1.42 0.97 0.86 0.76 0.87 0.80 0.77 0.61 0.61 0.62 0.62 0.59 0.55 0.58 0.60 0.57 0.60
மொத்த இறப்புக்கள் 10,717 12,505 13,891 15,693 17,222 17,101 17,610 18,027 18,481 18,938 19,393
இறப்புவீதம் (1000 குடியிருப்பாளர்களுக்கு) 12.0 8.1 6.2 5.4 5.2 5.1 4.9 4.9 4.7 4.8 4.5 4.4 4.4 4.5 4.4 4.3 4.4 4.5 4.5 4.6 4.7
குழந்தை இறப்புவீதம் (1,000 பிறப்புகளுக்கு) 82.2 49.5 34.9 26.3 20.5 13.9 8.0 7.6 6.6 3.8 2.5 2.1 2.6 2.1 2.1 2.2 2.0 2.0 1.8 2.0 1.8
பிறப்பின் போது வாழ்வு எதிர்பார்ப்பு (ஆண்டு) 65.8 72.1 75.3 78.0 81.7 82.0 82.1 82.4 82.8
பிறப்பின் போது வாழ்வு எதிர்பார்ப்பு ஆண்களுக்கு (ஆண்டு) 64.1 69.8 73.1 76.0 79.2 79.5 79.8 80.1 80.5
பிறப்பின் போது வாழ்வு எதிர்பார்ப்பு பெண்களுக்கு (ஆண்டு) 67.8 74.7 77.6 80.0 84.0 84.1 84.3 84.5 84.9

இரண்டாம் உலகப்போரின் பின்னர், 1947 தொடக்கம் 1957 வரையிலான காலப்பகுதியில், சிங்கப்பூர் இன் சனத்தொகை அபரிதமான வளர்ச்சி கண்டது .[13] பிறப்புவீதம் அதிகரித்ததுடன் இறப்புவீதம் வீழ்ச்சி கண்டது.; சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் 4.4% ஆக காணப்பட்டதுடன், இதில் 1% புதிய குடியிருப்பாளர்களினால் ஏற்பட்டது; சிங்கப்பூர் வரலாற்றில் உச்ச பிறப்புவீதம் 1957 ஆம் வருடம் 42.7 (1000 நபர்களுக்கு) ஆக பதிவாகியது.

1960 ஆம் வருடம் முதல் சிங்கப்பூர் அரசாங்கம் குடும்ப திட்டமிடலை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது; சுதந்திரத்திற்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு பிறப்புவீதம் 29.5 (1000 நபர்களுக்கு) ஆக வீழ்ச்சி கண்டதுடன் சனத்தொகை வளர்ச்சி வீதமும் 2.5% ஆக வீழ்ச்சியடைந்தது.

சனத்தொகை வளர்ச்சி வீதம், 1947—2000[13]
காலப்பகுதி வளர்ச்சி வீதம்
1947—1957 84.7%
1957—1970 90.8%
1970—1980 13.3%
1980—1990 18.5%
1990— 2000 20.6%

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130106102400/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/1228473/1/.html. 
 2. 2.0 2.1 "September 28, 2011 - Singapore's Fertility Rate Dropped to a Record Low". http://www.thejakartaglobe.com/international/singapores-fertility-rate-dropped-to-a-record-low/468263. 
 3. http://www.unhcr.org/refworld/topic,463af2212,469f2f192,49749cb046,0.html
 4. Vasil, R K (2000). Governing Singapore: democracy and national development. Allen & Unwin. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86508-211-0. 
 5. "Constitution of the Republic of Singapore". Attorney-General's Chambers of Singapore website: Part XIII Section 152(2) இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617043338/http://statutes.agc.gov.sg/non_version/cgi-bin/cgi_retrieve.pl?actno=REVED-CONST&doctitle=CONSTITUTION%20OF%20THE%20REPUBLIC%20OF%20SINGAPORE%0a&date=latest&method=part&sl=1. பார்த்த நாள்: 11 August 2011. 
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160328213055/http://www.cidcm.umd.edu/mar/assessment.asp?groupId=83001#summary. 
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 Population Trends 2012 பரணிடப்பட்டது 2012-11-13 at the வந்தவழி இயந்திரம் Department of Statistics, Singapore.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101104163230/http://www.asiaone.com/Business/SME%2BCentral/Talking%2Bpoint/Story/A1Story20090916-168233.html. 
 9. http://www.moe.gov.sg/
 10. Lee Kuan Yew (22 June 2010). "Singapore releases 2010 population in Brief Report". Govmonitor. http://www.thegovmonitor.com/world_news/asia/singapore-releases-2010-population-in-brief-report-34158.html. பார்த்த நாள்: 23 June 2010. 
 11. Yearbook of Statistics Singapore 2015 பரணிடப்பட்டது 2015-08-02 at the வந்தவழி இயந்திரம் Department of Statistics, Singapore]
 12. 12.0 12.1 12.2 12.3 12.4 topic3 பரணிடப்பட்டது 2017-01-06 at the வந்தவழி இயந்திரம் (Population). Retrieved from Singapore - Yearbook of Statistics Singapore, 2015[தொடர்பிழந்த இணைப்பு], Department of Statistics, Singapore. Retrieved on 28 August 2015.
 13. 13.0 13.1 Wong, Theresa; Brenda Yeoh (2003). "Fertility and the Family: An Overview of Pro-natalist Population Policies in Singapore". ASIAN METACENTRE RESEARCH PAPER SERIES (12). http://www.populationasia.org/Publications/RP/AMCRP12.pdf. பார்த்த நாள்: 2015-11-15.