சாவித்ரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவித்ரி தேவி முகர்ஜி
பிறப்புமாக்சிமியானி ஜீலியா போர்டாஸ்
செப்டம்பர் 30, 1905
லியோன், பிரான்சு
இறப்பு22 அக்டோபர் 1982(1982-10-22) (அகவை 77)
சிபில் ஹெடிங்ஹாம், எசக்ஸ், இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்லியான் பல்கலைக்கழகம்
பணிஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்
வாழ்க்கைத்
துணை
அசித் கிருஷ்ணா முகர்ஜி

சாவித்ரி தேவி முகர்ஜி (Savitri Devi)என்கிற சாவித்ரி தேவி "மாக்ஸிமியானி போர்டாஸ்" என்பவரின் புனைபெயராகும். இவரது காலம் செப்டம்பர் 30, 1905 முதல் அக்டோபர் 22, 1982 வரை ஆகும். இவர் கிரீக், பிரெஞ்சு, இத்தாலியன் மொழி எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு ஆழ்ந்த சூழலியலின் முக்கிய ஆதரவாளர் ஆவார்,[1] மற்றும் நாசிசம், அச்சு நாடுகளுக்கு எதிராக இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளின் சார்பில் இந்தியாவிற்கான உளவாளியாக இருந்தார் [2][3] விலங்கு உரிமைகள் இயக்கங்கள் பற்றி அவர் எழுதினார், 1960 களில் நாஜி இயக்கத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார்[3][4]

1959 இல், விலங்கு உரிமைகள் விவாதத்தை "தி இம்பீச்மெண்ட் ஆஃப் மேன்" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்[3] மேலும், இந்து சமயத்தின் ஆதரவாளராக இருந்தார்.[5]

இளமைப்பருவம்[தொகு]

"மாக்ஸிமியானி ஜூலியா போர்டாஸ்" என்ற இயற்பெயருடன் 1905இல் பிறந்த சாவித்ரி தேவி மாக்சிம் போர்ட்டஸ் என்பவருக்கு மகளாவார். கிரேக்க மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு குடிமகனுக்கும், ஒரு ஆங்கில பெண்மணிக்கும் மகளாகவார். ஜூலியா போர்டாஸ் எடைக்குறைவாக குறைப்பிரசவத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்திலிருந்து அவர் தனது அரசியல் கருத்துக்களை வலியுறுத்தினார். மேலும், அவரது வாழ்நாள் முழுவதும், அவர் விலங்குகள் உரிமைகளுக்காக ஆர்வமுள்ள ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவரது முந்தைய அரசியல் தொடர்புகள் கிரேக்க தேசியவாதத்துடன் இருந்தன.

இவர், தத்துவம் மற்றும் வேதியியல் படித்தார், இரண்டு முதுகலை பட்டங்கள் மற்றும் ஒரு முனைவர் பட்டத்தை தத்துவத்தில் லியோன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அடுத்து இவர் கிரேக்கத்திற்குப் பயணம் செய்தார், அங்குள்ள புகழ்பெற்ற இடிபாடுகளை ஆய்வு செய்தார். இங்கே ஹெயின்ரிச் ஷிலீமேனின் சுவசுத்திக்காவின் அனத்தோலியா கண்டுபிடிப்பை அறிந்திருந்தார். பண்டைக் கிரேக்கம், ஆரியர்களின் மூலமாக இருந்ததாக அவரது முடிவு இருந்தது.[6]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Nicholas Goodrick-Clarke (1998). Hitler's Priestess: Savitri Devi, the Hindu-Aryan Myth, and Neo-Nazism. NY: New York University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-3110-4
  2. Nicholas Goodrick-Clarke (2003). Black Sun: Aryan Cults, Esoteric Nazism, and the Politics of Identity. New York University Press. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8147-3155-4. இணையக் கணினி நூலக மைய எண் 47665567. {{cite book}}: Cite has empty unknown parameters: |month= and |coauthors= (help)
  3. 3.0 3.1 3.2 "The new encyclopedia of the occult", John Michael Greer. Llewellyn Worldwide, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56718-336-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56718-336-8. p. 130-131
  4. "Politics and the Occult: The Left, the Right, and the Radically Unseen", Gary Lachman. Quest Books, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8356-0857-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8356-0857-2. p. 257
  5. Smith, Blake (17 December 2016). "Writings of French Hindu who worshipped Hitler as an avatar of Vishnu are inspiring the US alt-right". Scroll.in. https://scroll.in/article/823142/writings-of-french-hindu-who-worshipped-hitler-as-an-avatar-of-vishnu-are-inspiring-the-us-alt-right. பார்த்த நாள்: 10 January 2017. 
  6. "Savitri Devi: The Woman Against Time" by R. G. Fowler. Mourning the Ancient. Accessed 30 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்ரி_தேவி&oldid=2701231" இலிருந்து மீள்விக்கப்பட்டது