சாவகச் சருகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகச் சருகுமான்
ஜெருசலேம் உயிரியல் பூங்காவில் சாவகச் சருகுமான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திராகுலசு
இனம்:
தி. சாவானிகசு
இருசொற் பெயரீடு
திராகுலசு சாவானிகசு
ஓசுபெக், 1765

சாவகச் சருகுமான் (Java mouse-deer) என்பது திராகுலிடே குடும்பத்தில் உள்ள இரட்டைப்படைக் குளம்பியான சருகுமான் சிற்றினமாகும். இது முதிர்ச்சி அடையும் போது, ஒரு முயலின் அளவு இருக்கும். இது தற்போது வாழும் மிகச் சிறிய குளம்பி ஆகும். இவை சாவகம் மற்றும் பாலியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இருப்பினும் அங்கு காணப்படுவது குறித்து சரிபார்க்கப்படவில்லை.[1]

விளக்கம்[தொகு]

சாவகச் சருகுமான்களின் உடல் சற்று உருண்டு திரண்டு இருக்கும். என்றாலும் இவற்றின் கால்கள் இந்திய சருகுமான்களைப் போல மெலிந்த கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலிர் உள்ள உரோமங்கள் காவி நிறமுடையனவாகவும், ஆங்காங்கே வெண் புள்ளிகளைக் கொண்டனவாக இருக்கும்.

இந்த இன சருகு மான்களுக்கு கோரைப் பற்கள் தந்தம் போல நீண்டு வளர்ந்து இருக்கும். இவை நீண்ட வளை தோண்டி அதனுள் வாழும். உணவிற்காக மட்டுமே இரவில் அதிலிருந்து வெளிவரும். புற்களையும், இலைகளையும், தரையில் விழுந்திருக்கும் பழங்களையும் உணவாக கொள்ளும்.[2]

இவை கூட்டமாக வாழ்வதில்லை. இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் ஆணும் பெண்ணும் சேர்ந்து காணப்படும். இவற்றின் கர்பக் காலம் பொதுவாக 4.5 மாதங்கள் அல்லது 144 நாட்கள் ஆகும்.[3] கர்ப காலம் முடிந்த பிறகு ஒரு குட்டியை ஈனும். புதிதாகப் பிறந்த மான் குட்டியின் சராசரி நிறை 370 கிராம் (13 அவுன்ஸ்) ஆகும். மேலும் இந்த குட்டிகள் பிறந்த 30 நிமிடங்களுக்குள் நிற்கும் திறன் கொண்டவை. மான் குட்டிகள் இரண்டு வாரங்களுக்குள் திட உணவை உண்ணும் திறன் கொண்டவை. சராசரியாக, ஆண் மற்றும் பெண் இருபாலின மான்களும் பாலியல் முதிர்ச்சி அடைய 167 நாட்கள் (~5 மாதங்கள்) ஆகும்.[4] இந்த சருகு மான்கள் காப்பிடங்களில் 14 வருடங்கள் வரை வாழ்வது அவதானிக்கபட்டுள்ளது. ஆனால் இயற்கையில் அவற்றின் ஆயுட்காலம் இன்னும் சரியாக தெரியவில்லை.[3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Duckworth, J.W.; Timmins, R.; Semiadi, G. (2015). "Tragulus javanicus". IUCN Red List of Threatened Species 2015: e.T41780A61978138. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T41780A61978138.en. https://www.iucnredlist.org/species/41780/61978138. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. பேராசிரியர் கே. கே. ராஜன், உலகில் உள்ள மான்கள் (நூல்) பக்கம்: 76-77, பதிப்பு: 1998, சூலை, கார்த்திக் பதிப்பகம், மேற்கு மாப்பலம், சென்னை, 33
  3. 3.0 3.1 Facts about Lesser Mouse Deer (Tragulus javanicus) - Encyclopedia of Life. (n.d.). Encyclopedia of Life - Animals - Plants - Pictures & Information. Retrieved from http://eol.org/pages/328339/
  4. Kingdon, J. (1989). East African mammals : an atlas of evolution in Africa. London: Academic Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகச்_சருகுமான்&oldid=3615856" இலிருந்து மீள்விக்கப்பட்டது