இந்திய புள்ளிச் சருகுமான்
Jump to navigation
Jump to search
இந்திய புள்ளிச் சருகுமான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முண்ணாணி |
வகுப்பு: | முலையூட்டி |
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பி |
குடும்பம்: | சருகுமான் குடும்பம் |
பேரினம்: | நிலச் சருகுமான் |
இனம்: | M. indica |
இருசொற் பெயரீடு | |
Moschiola indica (கிரே, 1852) | |
வேறு பெயர்கள் | |
Tragulus meminna (பகுதியளவில்) |
இந்திய புள்ளிச் சருகுமான் (Moschiola indica) என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் வசிக்கும் சருகுமான் குடும்பத்தில் உள்ள இரட்டைப்படைக் குளம்பி விலங்காகும். இதன் உடலின் நீளம் கிட்டத்தட்ட 23 அங்குலம் (57.5 சமீ) உம் இதன் வாலின் நீளம் கிட்டத்தட்ட 1 அங்குலம் (2.5 சமீ) உம் ஆகும்; இதன் நிறை அண்ணளவாக 7 இறாத்தல் (3 கிகி) இருக்கும்.
மழைக்காடுகளில் வாழும் இது இரவில் நடமாடக்கூடியதாகும். வெண் புள்ளிச் சருகுமான் (Tragulus meminna) இனத்தின் துணையினமொன்றாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த இது கூடுதல் ஆய்வுகளின் பின்னர் தனியினமாகக் குறிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Moschiola kathygre". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). இவ்வினம் ஏன் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாகக் கருதப்படுகிறது என்பதற்கான நியாயப்படுத்தல்களை தரவுத்தளம் கொண்டுள்ளது.
- ↑ Groves, C. & Meijaard, E. (2005) சருகுமான்களில் உள்ளக வேறுபாடு, இந்தியச் சருகுமான். The Raffles Bulletin of Zoology. Supplement 12:413-421 PDF கோப்பு