சாலா
Appearance
சாலா Chala | |
---|---|
ஆள்கூறுகள்: 11°51′21″N 75°26′25″E / 11.8559°N 75.4403°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கண்ணூர் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | கண்ணூர் மாநகராட்சி ஆணையம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.29 km2 (3.59 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 17,088 |
• அடர்த்தி | 1,800/km2 (4,800/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கே.எல் 13 |
சாலா (Chala, Kannur) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் நகராட்சியும் மாவட்டத்தின் தலைநகரமும் ஆன கண்ணூரின் புறநகர் பகுதியாக சாலா நகரம் கருதப்படுகிறது. கண்ணூருக்கு தெற்கே 10 கி.மீ. (6.2 மைல்) தொலைவில் தலச்சேரி நோக்கி தேசிய நெடுஞ்சாலை 66 இல் அமைந்துள்ளது.[1]
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாலாவில் 7,698 ஆண்கள் மற்றும் 9,390 பெண்கள் என மொத்தம் 17,088 பேர் இருந்தனர். சாலா மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் 9.29 கி.மீ. (5.77 மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு 3,486 குடும்பங்கள் வசிக்கின்றன. சாலாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 96.7% ஆகும். இது மாநில கல்வியறிவு சராசரியான 94% என்பதை விட அதிகமாகும். சாலாவில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur (PDF). Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. p. 192,193. Retrieved 14 July 2020.