சார்மதி மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்மதி மலைத்தொடர் (சார்மாடி) என்பது தெற்கு கன்னட மாவட்டம் பெள்தங்கடி வட்டத்தில் சிக்கமகளூருவின் முடிகெரே வட்டத்திலும் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது தெற்கு கன்னடாவை சிக்கமகளூரு மாவட்டத்துடன் இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இடங்களுள் இதுவும் ஒன்று. இம்மலைப்பகுதி சார்மதி மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது. இது மங்களூரு மற்றும் தும்குருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 73-ல் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள இடங்கள் சார்மதி கிராமம், உஜிரே, பெள்தங்கடி, புத்தூர், கொட்டிகெஹாரா, பாலூர் மற்றும் கலசா மற்றும் பனகல் முதலியன.

சார்மதி மலைத்தொடர் சார்மதி கிராமத்திலிருந்து தொடங்குகிறது (உஜிரேயிலிருந்து 11 கி.மீ.) மற்றும் கொட்டிகெஹராவில் முடிவடைகிறது. சார்மதி மலைத்தொடர் தெற்கு கருநாடாகவின் வடகிழக்கு பகுதிகளை சிக்மகளூர் மாவட்டத்துடன் உஜிரே-கொட்டிகெராவில் இணைக்கிறது.[1] இது தர்மஸ்தலாவிலிருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ளது. பல்லராயனதுர்கா என்பது மலையில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். இது கொட்டிகெஹர - கலச பாதையில் சுங்கசாலையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

பல்லாராயனதுர்கா கோட்டையை இருபக்கங்களிலிருந்தும் அணுகலாம். சுங்கசாலேயிலிருந்து குறுகிய பாதையில், ஹொரநாட்டிலிருந்து செல்லும் வழியில் அல்லது பந்தஜேயிலிருந்து நீண்ட பாதையில் அமைந்துள்ளது. சார்மாடி காட் பகுதியில், 200 அடி உயரத்தில் இருந்து விழும் பந்தஜே அர்பி (துளுவில் அர்பி என்றால் 'நீர்வீழ்ச்சி') என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. கடைகல்லு சிகரம் 1700 அடி உயரத்தில் உள்ளது. [2]

தேசிய நெடுஞ்சாலை 73[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 73 (முன்பு தேசிய நெடுஞ்சாலை 234) சார்மதியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறுகிறது. இந்த மலைப்பிரிவு 12 குண்டுசீ வளைவுகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி 7000 மி.மீக்கும் அதிகமான மழையைப் பெறுகிறது. இப்பகுதியில் உள்ள சில முக்கிய சிகரங்களில் ஜேனுகல்லு குடா, பாலேகல்லு குடா மற்றும் கொடேகல்லு குடா ஆகியவை அடங்கும். கன்னடம் மற்றும் துலுவில், கோடே என்றால் 'குடை', என்றும் கல்லு என்றால் 'பாறை' என்றும் குடா என்றால் 'மலை' என்றும் பொருள். இந்த மலைப் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. பாலேகல்லு குடா 11வது குண்டூசி வளைவில் அமைந்துள்ளது. வானம் தெளிவான நாளில், மங்களூர் கடற்கரையினை சார்மதி மலையிலிருந்து காணலாம். நேத்ராவதி ஆறு சார்மதி மற்றும் குதுரேமுக இடையே அமைந்துள்ள பங்கராபலிகேவில் உற்பத்தியாகிறது. கர்நாடகாவின் மற்ற மலைப் பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இந்த மலைப் பகுதி மிகவும் ஆழமானது. தெற்கு கன்னடத்தில் உள்ள மற்ற இடங்களை ஒப்பிடும்போது, சார்மாதியில் குளிர்காலத்தில் குளிர் மிக அதிகமாக இருக்கும்.[3]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A paradise hidden away from the busy highway". The Hindu newspaper. 1 December 2012. பார்க்கப்பட்ட நாள் 7 June 2015.
  2. "Varied landscapes of Charmadi". Deccan Herald. 16 May 2011. http://www.deccanherald.com/content/161769/F. 
  3. "The many faces of Charmadi". Deccan Herald. 29 April 2014. http://www.deccanherald.com/content/402776/many-faces-charmadi.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்மதி_மலைத்தொடர்&oldid=3749935" இலிருந்து மீள்விக்கப்பட்டது