சாரணியக் கைவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரணியக் கைவினை (Scoutcraft) அல்லது சாரணியக் கலை என்பது சாரண, சாரணியர்கள் பல்வேறு வகையான மரவேலைகளைச் செய்வதற்கான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருப்பதனைக் குறிப்பதாகும். சமூகம் மற்றும் ஆன்மீகத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களின் முக்கிய பகுதியாக உணரப்படும் திறன் மற்றும் அறிவைப் பிரதிபலிக்கும் வகையில் சாரணர் அமைப்புகளால் இந்த வார்த்தை ஏற்றுக்கொள்ளப்பட்டது. முகாமிடுதல், சமையல் செய்தல், முதலுதவி, வனாந்தரத்தில் உயிர்வாழ்தல், ஆக்கல் கலை ஆகிய திறன்கள் பொதுவாக சேர்க்கப்பட்டுள்ளன.

தோற்றம்[தொகு]

ஐரோப்பியர்களுக்கு, சாரணக் கைவினையானது பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உயிர்வாழத் தேவையான மரவேலைத் திறன்களில் இருந்து வளர்ந்தது. டேனியல் பூன் போன்ற எல்லைப்புற வீரர்களுக்கு அடையாளம் காணப்படாத வனப்பகுதிகள், கடினமான நிலப்பரப்புகளின் வழியாக பயணிக்க இந்தத் திறன்கள் தேவைப்பட்டன. ஆனால் சாரணர்களின் வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பூர்வீக அமெரிக்கர்களால் சாரணியக் கைவினைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது மற்றும் பூர்வீக அமெரிக்க சாரணர்களிடமிருந்து தான் இக்கலையானது அமெரிக்க பழைய மேற்கு நாடுகளில் பொதுவாக அறியப்பட்டு, ஆரம்பகால ஐரோப்பிய முன்னோடிகளுக்கு அறிமுகமானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் போர்கள் நடந்த விதம் மாறியதால், சில இராணுவப் படைகளின் பகுதிகளால் சாரணியக் கைவினை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமெரிக்க சாரணர், பிரடெரிக் ரஸ்ஸல் பர்ன்ஹாம் இந்தத் திறன்களை ஆப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தினார், இரண்டாம் மாடபேல் போரில், சாரணர் இயக்கத்தின் நிறுவனரான ராபர்ட் பேடன்-பவலுக்கு இதை அறிமுகப்படுத்தினார். [1] பேடன்-பவல், மாடோபோ ஹில்ஸ், மாடபெலேலேண்டில் (இப்போது ஜிம்பாப்வேயின் ஒரு பகுதியில்) முதன்முதலில் இளைஞர்களுக்கு சாரணியக் கைவினைகளைப் பயிற்சியளிக்கும் திட்டத்திற்கான தனது யோசனையை உருவாக்கத் தொடங்கினார். இது தொடர்பாக சில நூல்களையும் எழுதினார்.

சாரணியம்[தொகு]

திறன்கள்[தொகு]

1964 இன் பாய் ஸ்கவுட் ஹேண்ட்புக் (ஆறாவது பதிப்பு) இல் எடுக்கப்பட்ட சாரணியக் கைவினைத் திறன்களின் எடுத்துக்காட்டு பட்டியல்:

மேற்கோள்கள்[தொகு]

  1. Baden-Powell, Robert (1908). Scouting for Boys: A Handbook for Instruction in Good Citizenship. London: H. Cox. xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-45719-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரணியக்_கைவினை&oldid=3953922" இலிருந்து மீள்விக்கப்பட்டது