சாம் தம்பிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம் தம்பிமுத்து
Sam Tambimuttu

waa.u.
மட்டக்களப்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1990
பின்வந்தவர் யோசப் பரராஜசிங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1932
இறப்பு 7 மே 1990(1990-05-07)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தொழில் வழக்கறிஞர்
சமயம் கிறித்தவர்
இனம் இலங்கைத் தமிழர்

சாமுவேல் பெனிங்டன் தவராசா தம்பிமுத்து (Samuel Pennington Thavarasa Tambimuttu, 1932 - 7 மே 1990) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

தம்பிமுத்து 1932 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[1] இவர் இலங்கை அரசாங்க சபை உறுப்பினராக இருந்த ஈ. ஆர். தம்பிமுத்துவின் உறவினர் ஆவார்.[1][2] முன்னாள் மேலவை உறுப்பினர் எம். மாணிக்கம் என்பவரின் மகள் கலாவைத் திருமணம் புரிந்தார்.[1][3] இவர்களது மகன் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.[2]

பணி[தொகு]

தம்பிமுத்து வழக்கறிஞராக மட்டக்களப்பில் பணியாற்றினார்.[1][3] மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[4]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராகப் பல காலம் இருந்து செயல்பட்டார்.[3] 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

படுகொலை[தொகு]

தம்பிமுத்து கொழும்பில் உள்ள கனடா தூதரகத்தின் முன்னால் 1990 மே 7 ஆம் நாள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3] இதன் போது படுகாயமடைந்த இவரது மனைவி கலா 1990 மே 16 அன்று மருத்துவமனையில் காலமானார்.[3] இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_தம்பிமுத்து&oldid=3083084" இருந்து மீள்விக்கப்பட்டது