சாம்பல் தலை ஆள்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பல் தலை ஆள்காட்டி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சரத்ரிடே
பேரினம்:
வனெல்லசு
இனம்:
V. cinereus
இருசொற் பெயரீடு
Vanellus cinereus
(பிலித், 1842)
வேறு பெயர்கள்

Hoplopterus cinereus (பிலித், 1842)
Microsarcops cinereus (பிலித், 1842)
Pluvianus cinereus பிலித், 1842

சாம்பல் தலை ஆள்காட்டி (ஆங்கிலப் பெயர்: grey-headed lapwing, உயிரியல் பெயர்: Vanellus cinereus) என்பது ஒருவகை ஆள்காட்டிப் பறவை ஆகும். இது வடகிழக்குச் சீனா மற்றும் சப்பானில் இனப்பெருக்கம் செய்கின்றது.

கள அடையாளங்கள்[தொகு]

இது 34-37 செ.மீ. நீளம் இருக்கும். இதன் தலை மற்றும் கழுத்து சாம்பல் நிறத்திலும், மார்பு அடர் சாம்பல் நிறத்திலும், வயிறு வெள்ளையாகவும் இருக்கும். கருப்பு நுனி கொண்ட மஞ்சள் அலகும் மஞ்சள் கால்களும் தெளிவான அடையாளங்கள். பறக்கும்போது, மேற்பகுதியில் கருமை நிற முதன்மை இறகுகளுக்கும் உடலையொட்டிய பழுப்பு நிற போர்வையிறகுகளுக்கும் இடையில் வெண்ணிற இறகுகள் தெளிவாகத் தெரியும்.

பரவல்[தொகு]

தென்கிழக்கு சீனா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து வழியாக வங்கதேசம், மேற்கு வங்கம் தொடங்கி இந்தியாவின் வடபகுதிகளிலும் இந்தியாவின் கிழக்குப் பகுதி, தென்னிந்தியா, இலங்கையிலும் சாம்பல் தலை ஆள்காட்டிகள் வலசை வருகின்றன.

தமிழகத்தில்[தொகு]

சென்னையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் சதுப்புநிலம் ஆகிய இடங்களிலும் திருச்சி அருகே காவிரி ஆற்றின் கரைப்பகுதிகளிலும் கோயம்புத்தூரிலும்[2] இராஜபாளையத்திலும் வலசைப் பறவைகள் பார்க்கப்பட்டுள்ளன.[3]

வாழ்விடம்[தொகு]

சதுப்புநிலங்கள், நெல்வயல்கள், ஆறுகளை ஒட்டிய பகுதிகளை இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கின்றன; குளிர்காலத்தில் ஆற்றங்கரைகள், புல்வெளிகள், வயல்வெளிகள், குளங்கள், ஏரிகள், சதுப்புநிலங்களில் இவற்றைக் காணலாம்[4].

உசாத்துணை[தொகு]

  1. "சாம்பல் தலை ஆள்காட்டி". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "ebird -- Species map". ebird.org. பார்க்கப்பட்ட நாள் 07 November 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: பறவைகள் ஆர்வலர் ஆய்வில் தகவல்". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2017.
  4. "Gray-headed Lapwing". birdsoftheworld.org. பார்க்கப்பட்ட நாள் 07 November 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தலை_ஆள்காட்டி&oldid=3929722" இலிருந்து மீள்விக்கப்பட்டது