சாந்தி கிரானந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி கிரானந்து
சாந்தி கிரானந்து
பிறப்பு1932 (1932)
இலக்னோ, இந்தியா
இறப்பு(2020-04-10)ஏப்ரல் 10, 2020 (aged 87)
குருகிராம், இந்தியா
அறியப்படுவதுஇந்துஸ்தானி இசை
விருதுகள்பத்மசிறீ (2007)

சாந்தி கிரானந்து (இந்தி : शन्न्र्ना) (1932-10 ஏப்ரல் 2020) ஓர் இந்தியப் பாடகரும், பாரம்பரிய இசைக்கலைஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் கசல் பாடகராகப் புலமை பெற்றவர். இவர் பேகம் அக்தர்: என் அம்மியின் கதை புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இது பேகம் அக்தர் எனும் புகழ்பெற்ற கசல் பாடகரின் வாழ்க்கை வரலாற்றுப் படைப்பு.

வாழ்க்கை[தொகு]

சாந்தி 1933-இல் இலக்னோவை தளமாகக் கொண்ட ஒரு சிந்தி வணிகக் குடும்பத்தில் பிறந்தார் (இப்போது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்), சாந்தி கிரானந்து 1940களில் இவரது தந்தை தனது தொழிலை இடம்மாறியபோது, பத்கண்டே இசை நிறுவனத்தில் படித்தார்.[1][2][3]

1947ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலி லாகூரில் இவரது முதல் இசை நிகழ்ச்சி இருந்தது. மேலும் 1947ஆம் ஆண்டில் இந்தியா பிரிவினைக்குப் பிறகு இவரது குடும்பம் இந்தியாவுக்குத் திரும்பியபோது, ராம்பூரைச் சேர்ந்த உசுதாத் ஐஜாசு உசேன் கானின் பயிற்சியின் கீழ் லக்னோவில் தனது இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார்.[4][3] 1952ஆம் ஆண்டில், ஒரு வானொலி நிலையத்தின் அதிகாரி ஒருவர் பேகம் அக்தரின் கீழ் பயிற்சி பெறப் பரிந்துரைத்தார்.[2][3] 1957ஆம் ஆண்டில், சாந்தி பேகம் அக்தரின் கீழ் தும்ரி, தாத்ரா மற்றும் கசல் பாடுவதில் பயிற்சி பெறத் தொடங்கினார். மேலும் 1974ஆம் ஆண்டில் அக்தர் இறக்கும் வரை இந்த உறவு தொடர்ந்தது. இந்த உறவின் கதை கிரானந்தின் அக்தர், பேகம் அக்தர் தி ஸ்டோரி ஆப் மை அம்மி என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 2005-இல் வெளியிடப்பட்டது.[5][6]

இந்திய அரசு தனது நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீயினை 2007-இல், இவரது இந்துஸ்தானி இசை பங்களிப்புகளுக்காக வழங்கியது.[7] இசை குறித்த இவரது விளக்கக்காட்சிகள் தொகுக்கப்பட்டு ஒலி மென்வட்டாக வெளிவந்துள்ளன. இது அன்பின் வெளிப்பாடுகள் எனப் பெயரிடப்பட்டு மியூசிக் டுடே மூலம் வெளியிடப்பட்டுள்ளது.[8] இலக்னோவில் வசித்து வந்த சாந்தி, பேகம் அக்தர் அபிமானி குழு இலக்னோவில் உள்ள அக்தரின் வீட்டை நினைவாக ஓர் அருங்காட்சியகமாக மாற்றுவதில் இணைந்து செயல்பட்டார்.[9] தில்லியில் உள்ள திரிவேணி கலா சங்கத்தில், தனது கடைசி தசாப்தங்களில் இசை கற்பித்து வந்தார்.[3]

இறப்பு[தொகு]

சாந்தி கிரானந்த் 10 ஏப்ரல் 2020 அன்று அரியானாவில் உள்ள குருகிராம் காலமானார்.[10][11]

நூலியல்[தொகு]

  • Begum Akhtar: The Story of My Ammi. Viva Books. 

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shanti Hiranand on Indian Raga". Indian Raga. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
  2. 2.0 2.1 Kidwai, Saleem (10 April 2020). "With the passing of Shanti Hiranand, the Begum Akhtar era is formally over" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/with-the-passing-of-shanti-hiranand-the-begum-akhtar-era-is-formally-over/article31313057.ece. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Ghazal singer Shanti Hiranand, torchbearer of Begum Akhtar's legacy, passes away". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 11 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 April 2020. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":1" defined multiple times with different content
  4. "Explaining nuances of ghazals the begum Akhtar way". Times of India. 23 September 2012. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
  5. "About the book". Viva Books. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
  6. Rajan, Anjana (19 March 2014). "Looking into the mirror". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/looking-into-the-mirror/article5804960.ece. 
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  8. "Expressions of Love". Music Today. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
  9. "In memory of Begum Akhtar". Times of India. 16 January 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
  10. "Padma Shri singer Shanti Hiranand passes away at 87". 10 April 2020.
  11. "Hindustani classical singer and Padma Shri awardee, Shanti Hiranand, passes away at 87". The Economic Times. 11 April 2020. https://economictimes.indiatimes.com/magazines/panache/hindustani-classical-singer-and-padma-shri-awardee-shanti-hiranand-passes-away-at-87/articleshow/75091635.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • Shanti Hiranand discography at Discogs

வார்ப்புரு:Padma Shri Award Recipients in Art

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_கிரானந்து&oldid=3914878" இலிருந்து மீள்விக்கப்பட்டது