சாக்சுட்டன் ஓவல் அரங்கம்
சாக்சுட்டன் ஓவல் 2010 | |||
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | நெல்சன், நியூசிலாந்து | ||
உருவாக்கம் | 2009 (முதலில் பதியப்பட்ட ஆட்டம்) | ||
இருக்கைகள் | 5,000 | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
n/a | |||
பன்னாட்டுத் தகவல் | |||
முதல் ஒநாப | சனவரி 04, 2014: நியூசிலாந்து எ மேற்கிந்தியத் தீவுகள் | ||
கடைசி ஒநாப | மார்ச் 05 2015: வங்காளதேசம் எ இசுக்காட்லாந்து | ||
அணித் தகவல் | |||
| |||
சூன் 20 2014 இல் உள்ள தரவு மூலம்: அரங்கக் குறிப்பு |
சாக்சுட்டன் ஓவல் (Saxton Oval) அல்லது சாக்சுட்டன் களம் (Saxton Field) நியூசிலாந்தின் நெல்சனில் உள்ள துடுப்பாட்ட ஆடுகளமாகும். இது 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான நிகழிடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளின்போது மூன்று ஆட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]
வரலாறு
[தொகு]நெல்சன் துடுப்பாட்ட சங்கம் $3.8 மில்லியன் செலவில் இதைக் கட்டி முடித்த பின்னர் முந்தைய டிரபால்கர் பூங்காவிலிருந்து இங்கு மாறியது. பன்னோக்கு விளையாட்டு வளாகத்தின் ஒரு அங்கமாக சாக்சுட்டன் ஓவல் உள்ளது. இந்த வளாகத்தில் தடகள விளையாட்டுக்கள், சங்கக் கால்பந்து, வளைதடிப் பந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்டம் விளையாடவும் வசதிகள் உள்ளன.[2]
இங்கு ஆடவருக்கான முதல் பன்னாட்டு துடுப்பாட்டம் சனவரி 4, 2014 அன்று நடைபெற்றது; மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நியூசிலாந்திற்கும் இடையே 50 நிறைவு ஆட்டம் ஆடப்பட்டது.[3]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ McKeown, John (29 சூலை 2013). "West Indies to play World Cup cricket in Nelson". Nelson Mail. http://www.stuff.co.nz/nelson-mail/sport/8980814/West-Indies-to-play-World-Cup-cricket-in-Nelson. பார்த்த நாள்: 29 சூலை 2013.
- ↑ "Saxton Field". www.nelsoncitycouncil.co.nz. பார்க்கப்பட்ட நாள் 3 November 2011.
- ↑ "Nelson to host maiden one-day international".