சாகி லால் தேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகி லால் தேரா (Shahi Lal Dera) (சிவப்பு கூடாரம், அரச சிவப்பு கூடாரம்),[1] என்பது ஒரு ஏகாதிபத்திய முகலாயக் கூடாரமாகும். இது ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜகானுக்கு சொந்தமான துணி அமைப்பாகும்.[2] இக்கூடாரம் நகரக்கூடிய அரண்மனையாக இருந்தது.[3][4]

அம்சங்கள்[தொகு]

இது ஒரு முகலாய கூடாரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே உதாரணம். [1] 17 ஆம் நூற்றாண்டின் முகாம் சோத்பூரில் உள்ள மெக்ரன்கரின் அரச சேகரிப்பின் ஒரு பகுதியாகும். இதன் அரச நிலை சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கிறது. மேலே உள்ள கிரீடம். சிவப்புத் துணி முழுக்க முழுக்க பட்டு, வெல்வெட் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அழகான சித்திரத்தையல் மற்றும் புரோகேட் வடிவங்களைக் கொண்டுள்ளது. கூடாரத்தில் முகலாயப் பேரரசரின் சிம்மாசனத்திற்கான அழகான பலகைகள் உள்ளன. அத்துடன் மடல் கொண்ட வளைவுகளும் ஒரு உள் அறையும் உள்ளது . கூடாரத்தில் நான்கு மீட்டர் உயர உச்சி உள்ளது. இது இரட்டை அடுக்கு பேருந்துடன் ஒப்பிடத்தக்கது.[2] [1][5]

அபுல்-ஃபஸ்ல் இபின் முபாரக், முகலாயப் பேரரசர்களின் துணிகள், ஆயுதங்கள் மற்றும் கூடாரங்களைப் பற்றி ஐன்-இ-அக்பரியில் விரிவாக விவரித்துள்ளார்.[4]

சீரமைப்பு[தொகு]

2017 ஆம் ஆண்டு முதல் இதை சுத்தப்படுத்தி பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Willem. "Mughal Shahi Lal Dera Tent". trc-leiden.nl (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  2. 2.0 2.1 2.2 "Spring-cleaning India's most magnificent tent" (in en-GB). BBC News. 2017-05-13. https://www.bbc.com/news/magazine-39890722. 
  3. "shahi lal dera Archives". Media India Group (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  4. 4.0 4.1 "The Sunday Tribune - Spectrum". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  5. (in hi) Derāṃ rau khātau. Mahārājā Mānasiṃha Pustaka Prakāśa Śodha-Kendra. 2007. பக். XXIV. https://books.google.com/books?id=ctVLAQAAIAAJ&q=%22Shahi+Lal+Dera%22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகி_லால்_தேரா&oldid=3814299" இலிருந்து மீள்விக்கப்பட்டது