சவுமீ

ஆள்கூறுகள்: 39°55′32″N 116°26′30″E / 39.9255°N 116.4416°E / 39.9255; 116.4416
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌமி நிறுவனம்
வகைதனியார்
நிறுவுகைஏப்ரல் 6, 2010 (2010-04-06)
நிறுவனர்(கள்)லெய் ஜுன் மற்றும் லின் பின்
தலைமையகம்பெய்சிங்கு, சீனா
தொழில்துறைநுகர்வோர் மின்னணுவியல்
கணினி வன்பொருள்
உற்பத்திகள்செல்லிடத் தொலைபேசிகள்
நுண்ணறிபேசிகள்
கைக் கணினிகள்
வீட்டுத் தன்னியக்கக் கருவிகள்
பணியாளர்32,543 (31 டிசம்பர் 2022)

சௌமி அல்லது சியோமி (Xiaomi) என்பது சீனாவின் பெய்சிங்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஒர் சீனத் தனியார் நுகர்வோர் மின்னணுவியல் நிறுவனம் ஆகும். இது உலகத்திலே இரண்டாவது பெரிய நுண்ணறிபேசி உருவாக்கும் நிறுவனம் ஆகும்.[1] நுண்ணறிபேசிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நுகர்வோர் மின்னணுவியற் கருவிகளையும், இந்நிறுவனம் வடிவமைத்து, மேம்படுத்தி, விற்கின்றது.[2]

சௌமி, 2010 இல் பெய்ஜிங்கில் லெய் ஜுன் மற்றும் ஆறு கூட்டாளிகளுடன் இணைந்து நிறுவப்பட்டது. லெய் ஜுன் கிங்சாஃப்ட் மற்றும் Joyo.com ஆகிய நிறுவனத்தை நிறுவியுள்ளார். Joyo.com ஐ அவர் 2004 இல் $75 மில்லியனுக்கு அமேசானுக்கு விற்றுள்ளார்.

ஆகஸ்ட் 2011 இல், சௌமி தமது முதல் நுண்ணறிபேசியினை வெளியிட்டது, 2014 இல், சீனாவில் விற்கப்படும் நுண்ணறிபேசிகளின் சந்தையில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் நிறுவனம் அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் மட்டுமே விற்றது; இருப்பினும், அதன் நுண்ணறிபேசிகளின் பாரிய வெற்றியை தொடர்ந்து கடைகள் பலவற்றை திறந்தது. 2015 ஆம் ஆண்டளவில், சௌமி பரந்த அளவிலான நுகர்வோர் மின்னணு சாதனங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

சௌமி அதன் பொருட்களின் விலையை உற்பத்தி விலைக்கு அருகிலேயே விலையிடும். அதன் தயாரிப்புகளை 18 மாதங்களுக்கு சந்தைகளில் வைத்திருப்பதன் மூலம் இவ்வாறு குறைந்த விலையில் சௌமியால் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

சவுமீ என்பது சிறுதானியத்தை குறிக்கும் ஓர் சீனச்சொல் ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Worldwide Smartphone Market Posts 11.6% Year-Over-Year Growth in Q2 2015, the Second Highest Shipment Total for a Single Quarter, According to IDC". IDC. 23 சூலை 2015. Archived from the original on 2015-07-24. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2016.
  2. "小米47寸电视真机照曝光". MyDrivers. 17 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2016.
  3. Nic Fildes (30 திசம்பர் 2014). "'Millet' Xiaomi could be new Apple as Chinese challenger takes on iPhone". The Times. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுமீ&oldid=3947000" இலிருந்து மீள்விக்கப்பட்டது