உள்ளடக்கத்துக்குச் செல்

சலிமா மசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலிமா மசாரி
பல்கு மாகாணத்தில் சார்கிண்ட் மாவட்டத்தின் மாவட்ட ஆளுநர்
பதவியில்
2018 – 20 ஆகஸ்ட் 2021
தொகுதிசார்கிண்ட் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1980 (அகவை 43–44)
ஈரான்

சலீமா மசாரி (Salima Mazari; பிறப்பு 1980) ஆப்கானித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ஆப்கானித்தானில் பல்கு மாகாணத்தில் சார்கிண்ட் மாவட்டத்தின் மாவட்ட ஆளுநராகவும், ஆப்கானித்தானில் உள்ள மூன்று பெண் மாவட்ட ஆளுநர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். [1] கடந்த சில வருடங்களாக, சலிமா மசாரி ஆப்கானித்தானில் ஒரு பெண் தலைவராக மிகவும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றார்.

2021 தலிபான் தாக்குதலுக்கு பல ஆப்கானித்தான் அரசியல் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நேரத்தில், சலிமா மசாரி பல்கு மாகாணம் சரணடையும் வரை அங்கேயே தங்க முடிவு செய்தார். பின்னர், தாலிபான்கள் நாடு முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு சலீமா மசாரி கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

சுயசரிதை

[தொகு]

மசாரி 1980 இல் அகதிகள் ஆப்கானிஸ்தானின் மீது சோவியத் படையெடுப்பின் போது இவரது குடும்பம் தப்பியோடியதால் 1980 இல் ஈரானில் அகதியாக பிறந்தார். இவர் ஈரானிலேயே வளர்க்கப்பட்டார்.[2] [3] [4] ஈரானின் தெகுரான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறது தனது பெற்றோரை விட்டு ஆப்கானித்தானுக்குத் திரும்புவதற்கு முன் புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பில் பணியாற்றினார்.[5] 2018ஆம் ஆண்டில், இவர் பல்கு மாகாணத்தில் சார்கிண்ட் மாவட்டத்தின் மாவட்ட ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டார். இது இவரது மூதாதையர் மாகாணமாகும். ஆளுநராக, இவர் தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் உள்ளூர் போராளிகளை நியமிக்க ஒரு பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கினார். [6] 2020 ஆம் ஆண்டில், இவர் தனது மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட தாலிபான் வீரர்களை சரணடைய பேச்சுவார்த்தை நடத்தினார்.[7]

தாலிபான் தாக்குதல்

[தொகு]

2021 தலிபான் தாக்குதலுக்கு மத்தியில், நாட்டின் பல ஆளுநர்கள் செய்தது போல் இவரும் தப்பி ஓட மறுத்துவிட்டார். நிறைய ஆப்கானித்தான் மாகாணங்கள் அதிக சண்டையின்றி வீழ்ந்த நிலையில், பல்கு மாகாணத்தில் சார்கிண்ட் மாவட்டத்தை சேதமின்றி வைத்திருக்க சலிமா எல்லா வழிகளிலும் முயற்சித்தார். இவருடைய மாவட்டம் தலிபான்களுக்கு முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பை வெளிப்படுத்தியது. காபுலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆப்கானித்தானின் இஸ்லாமிய குடியரசு முழுவதுமாக வீழ்ச்சியடையும் வரை, தலிபான்களால் ஆக்கிரமிக்கப்படாத சில மாவட்டங்களில் இவருடைய மாவட்டமும் ஒன்றாகும்.[8]

தி கார்டியன் நாளிதழின் கூற்றுப்படி, இவர் தலைமை மீது நம்பிக்கையுடன் மற்றும் தடையில்லாமல் இருந்தார். "தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அவற்றை நம்மீது திணிக்கும் குழுக்களுக்கு எதிராக நாம் இப்போது போராடாவிட்டால், அவர்களை தோற்கடிப்பதற்கான வாய்ப்பை இழப்போம். அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவர்கள் சமூகத்தை மூளைச் சலவை செய்வார்கள். அவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்கிறேன் ... ஆனால் நான் பயப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் சட்டத்தின் ஆட்சியை நான் நம்புகிறேன்." என்றார்.

பிணைக்கைதி

[தொகு]

தீவிரவாத குழுவின் போராளிகள் நாடு முழுவதும் ஊடுருவியது, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றியது. இறுதியில், நாட்டின் தலைநகர் காபூல் அரசு அல்லது தேசிய இராணுவத்தின் சிறிய எதிர்ப்போடு சரிந்தது. ஆப்கானித்தானில் தலிபான் ஆட்சி தொடங்கியவுடன் கொடூரங்களும் தொடங்கியுள்ளன. தலிபான்களுக்கு எதிராக சலிமா மசாரி தொடர்ந்து குரல் எழுப்பி வந்த பல்கு மாகாண ஆளுநர் சலிமா மசாரியை ஆகத்து 18 அன்று, தலிபான்கள் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[9] [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'This is the first time I am holding a gun': Afghans take up arms to fight the Taliban". The World from PRX.
  2. "'Sometimes I have to pick up a gun': the female Afghan governor resisting the Taliban". The Guardian. 11 August 2021.
  3. "The Taliban captured a female Afghan governor who recruited militants to fight the Taliban, report says". Insider. 19 August 2021.
  4. "Salima fights on frontline against Taliban and corruption". June 14, 2020.
  5. Zainab Pirzad (11 August 2021). "'Sometimes I have to pick up a gun': the female Afghan governor resisting the Taliban". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  6. O’Donnell, Lynne. "With the Militias in Afghanistan".
  7. "The woman convincing the Afghan Taliban to give up arms". The National.
  8. Geeta Mohan (18 August 2021). "Salima Mazari, who took up arms to fight Taliban in Balkh Province, captured in Afghanistan". India Today. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  9. "Afghanistan Crisis: Salima Mazari, who raised her voice against Taliban, taken hostage". Zee News. 18 August 2021. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  10. "Who is Salima Mazari? 7 Things About The Afghani Woman Governor Who Has Been Captured". Shethepeople. 18 August 2021. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலிமா_மசாரி&oldid=3836084" இலிருந்து மீள்விக்கப்பட்டது