சர்வதேச இமாலய விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வதேச இமாலய விழா என்பது 1985 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற தலாய் லாமாவைக் கௌரவிக்கும் பொருட்டு இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவாகும். இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற இமயமலைப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பகுதி மக்களின் கலை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளின் கூட்டிணைப்பாக இந்த கலாச்சார விழா அறியப்படுகிறது. [1] அமைதி,  சமாதானம் மற்றும் ஒற்றுமை போன்றவைகளை வளர்க்கும்  முயற்சியை குறிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் இந்த திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மத்திய திபெத்திய நிர்வாகம் மற்றும் இமாச்சலப் பிரதேச சுற்றுலாத் துறையுடன் இணைந்து இந்தோ-திபெத்திய நட்புச் சங்கம் இந்த விழாவை ஆதரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்றது. [2]

கொண்டாட்டங்கள்[தொகு]

இமாச்சலப் பிரதேசத்தின் உள்ளூர் மக்களுக்கும் அங்கு வசிக்கும் திபெத்தியர்களுக்கும் இடையிலான உறவுகளையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதே இந்த திருவிழா. சர்வதேச இமாலய திருவிழாவின் முக்கிய அம்சங்களில் திபெத்திய கலைநிகழ்ச்சிக் கழகத்தின் கலைஞர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், சமூக குழுக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ஆகியோரால் நடத்தப்படும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் அடங்கும், சர்வதேச இமாலய திருவிழாவின் ஈர்ப்புகளில் மையமான ஒன்று தெருக்களில் பரவலாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள்தான். இமாலய மாநில மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பாரம்பரியங்கள், உள்ளூரில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் மக்களின் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளின் மூலம் அம்மாநில மக்களைப் பற்றிய முழு சித்திரமும் அறிந்து கொள்ளலாம். அங்குள்ள தெருக்கடைகளில் கிடைக்கும் உண்மையில் சுவையான உணவுகளை ருசிப்பதில் மட்டுமே ஒருவர் முழுநாளையும் செலவிடலாம் . இந்த மாபெரும் திருவிழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அம்மாநில மக்களின் வளமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு  காட்சிப் பெட்டியாக, இந்த திருவிழா பார்வையாளர்களை உணர வைக்கும் . [3] [4]

இமயமலை பிரதேசத்தில் பனித்துளி பொழிய த்தொடங்கும்  திசம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும்  இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசம் இமயமலையின் கீழ் பகுதியில் அமைந்திருப்பதால் டிசம்பர் மாதத்தில் சீதோஷ்ண நிலை மிகவும் குளிராக இருக்கும்.  இந்த திருவிழா கொண்டாட்டத்தின் மத்தியில், சுற்றுலா பயணிகள் வழக்கமான கட்டணத்தில்  அங்கே தங்கி சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதோடு இந்த விழாவிலும் கலந்து கொண்டு தங்களுக்கு ஆண்டு முழுவதும் தேவைப்படும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த மூன்று நாட்களும் , முழு இமாச்சல பிரதேச மாநிலமும்  பல்வேறு சமூகங்களால் நிகழ்த்தப்படும் கலாச்சார நிகழ்ச்சிகளின் இணக்கமான கலவையோடு பரபரப்பாக இயங்குகிறது. இந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட வளமான கலாச்சாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்..

மேற்கோள்கள்[தொகு]

  1. "International Himalayan Festival".
  2. "About International Himalayan Festival".
  3. "The International Himalayan Festival In McLeodganj".
  4. "International Himalayan Festiva".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வதேச_இமாலய_விழா&oldid=3653440" இலிருந்து மீள்விக்கப்பட்டது