சமீர் அக்தர் நக்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமிர் அக்தர் நக்வி
Zameer Akhtar Naqvi
சுய தரவுகள்
பிறப்பு
சமீர் ஆசன்

(1944-03-24)24 மார்ச்சு 1944 [1]
இறப்பு13 செப்டம்பர் 2020(2020-09-13) (அகவை 76)[2]
சமயம்சியா இசுலாம்
Educationகராச்சி பல்கலைக்கழகம், (முனைவர்)
Occupationஉருது மொழி கவிஞர்,அறிஞர்
பதவிகள்
இணையத்தளம்allamazameerakhtarnaqvi.com

சமீர் அக்தர் நக்வி (Zameer Akhtar Naqvi) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். ஒரு கவிஞராகவும் மத அறிஞராகவும் இவர் அறியப்படுகிறார். இந்தியாவின் லக்னோவில் பிறந்த சமீர் நிரந்தரமாக 1967 ஆம் ஆண்டு பாக்கித்தானின் கராச்சிக்கு குடிபெயர்ந்தார்.

ஓர் அறிஞர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் என பன்முகங்களுடன் இயங்கிய இவர் மதம் மற்றும் கவிதைகள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். அனீசு அகாடமியின் தலைவராக இருந்ததோடு, அல் கலாம் இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.[3] 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சமீர் அக்தர் நக்வியின் காணொளிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து விரைவாக பரவியது.

கல்வி[தொகு]

சமீர் பட்டப்படிப்பு வரை லக்னோவில் படித்தார். தனது பள்ளிக்கல்வியை லக்னோ உசைன் பள்ளியிலும், இடைநிலைப் படிப்பை லக்னோவில் உள்ள அரசு சூபிலி கல்லூரியிலும் படித்தார். லக்னோ சியா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார்.

இறப்பு[தொகு]

2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று சமீர் அக்தர் மாரடைப்பு காரணமாக ஆகா கான் மருத்துவமனையில் தனது 76 வயதில் இறந்தார். அஞ்சோலியில் உள்ள இமாம் பர்கா சூக்தா-இ-கர்பாலாவில் சமீரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. மேலும் இவர் கராச்சியில் உள்ள வாதி-இ-உசைன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[4][5][6][7][8]

புத்தகங்கள்[தொகு]

உருது கவிதை, இசுலாமிய வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், மதம், தத்துவம், சமூகவியல், அறிவியல், சொற்பொழிவு, மொழிகள், பத்திரிகை, கர்பலா நிகழ்வுகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை சமீர் அக்தர் நக்வி எழுதியுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • 'இயோசு மாலிக்-அபாடியின் மர்த்தியா' புத்தகத்திற்காக 1989 ஆம் ஆண்டு இவருக்கு மிர் அனீசு விருது வழங்கப்பட்டது.
  • காமன்வெல்த் விருது, லண்டன் அஞ்சுமன்-இ-பரோக்-இ-ஆசா 1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Renowned scholar Allama Dr Zameer Akhtar Naqvi passes away". Pakistan Today. 13 September 2020.
  2. "Renowned scholar Allama Dr Zameer Akhtar Naqvi dies in Karachi". The News. 13 September 2020.
  3. "Religious scholar Allama Zameer Akhtar Naqvi passes away in Karachi". DAWN News. 13 September 2020.
  4. "Renowned scholar Allama Zameer Akhtar passes away at 76". The Express Tribune. 13 September 2020.
  5. "Allama Zameer Akhtar Naqvi passes away in Karachi". Samaa News. 13 September 2020.
  6. "Famed scholar Allama Zameer Akhtar Naqvi passes away in Karachi". GEO News. 13 September 2020.
  7. "Religious scholar Allama Zameer Akhtar Naqvi passes away in Karachi". ARY News. 13 September 2020.
  8. "Religious scholar Allama Syed Zameer Akhtar Naqvi passes away". BOL News. 13 September 2020. Archived from the original on 27 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமீர்_அக்தர்_நக்வி&oldid=3929592" இலிருந்து மீள்விக்கப்பட்டது