சப்த மங்கைத் தலங்கள்
சப்த மங்கைத் தலங்கள் என்பவை, சப்த மாதாக்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் வழிபட்ட சிவாலயங்களாகும்.[1] சிவபெருமானை வழிபட்ட சப்த கன்னியருக்கு ஒவ்வொரு தலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு அங்கங்களும், ஆயுதங்களும் காட்சியளித்தன.[1]
நெற்றிக் கண் தரிசனம், கங்காதேவி தரிசனம், திரிசூல தரிசனம், பாத தரிசனம், உடுக்கை தரிசனம், மூன்றாம் பிறை தரிசனம், நாக தரிசனம் ஆகிய ஏழு தரிசனங்கள் கிடைக்கப்பெற்றதாக கூறுவர். இச்சிவாலயங்களை அநவித்யநாதசர்மா, அனவிக்ஞை தம்பதிகளும் வழிபட்டு பேரு பெற்றதாக கூறுவர்.[1]
பல்லக்கு திருவிழா
[தொகு]சப்த மங்கைத் தலங்களில் முதன்மையானதான சக்கராப்பள்ளியின் பெருமானும் அம்பாளும், காசியிலிருந்து வந்த அநவித்யநாதசர்மா, அனவிக்ஞை தம்பதிகளைப் போல பிற சப்த மங்கைத் தலங்களை பல்லக்கில் சென்று காணுவதை பல்லக்குத் திருவிழா என்று மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிகழ்வின் அம்மனும், பெருமானும் உற்சவர்களாக பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களோடு தலங்களுக்குச் செல்கின்றனர்.[1]