சபீன் மமூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபீன் மகமது (Sabeen Mahmud 2 0 ஜூன் 1974 - 24 ஏப்ரல் 2015) ( உருது: سبین محمود ) ஒரு முற்போக்கான பாக்கித்தான் மனித உரிமை ஆர்வலர் மற்றும் சமூக சேவகர், இவர் கராச்சியினைத் தளமாகக் கொண்ட கஃபே இரண்டாம் தளத்தை நிறுவினார். இவர் TiE இன் கராச்சி கிளைக்கும் தலைமை தாங்கினார்.[1]

கராச்சியில் பிறந்து வளர்ந்த முகமது கராச்சி கிராமர் பள்ளியிலும் பின்னர் கின்னெயர்ட் கல்லூரியிலும் கல்வி பயின்றார் . பின்னர் இவர் ஊடாடடும் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தை நிறுவினார் மற்றும் பாக்கித்தானின் குடிமக்கள் காப்பகத்தை நிறுவுவதற்காகப் பணியாற்றினார்.[2] திறந்த உரையாடலுக்கான சமூக இடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இவர் 2007 இல் தெ ச்செகண்ட் ஃபுலோர் என்பதனை (T2F) அமைத்தார். [3] முகமதுவின் தலைமையின் கீழ், T2F தொடர்ச்சியான தாராளவாத சமூக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தது.[4] பல ஆர்ப்பாட்டங்களை இணைந்து நடத்தியுள்ளார். இசுலாமாபாத்தின் ரெட் மசூதி போராட்டம் இதில் குறிப்பிடத்தகுந்தது ஆகும்.[4]

24 ஏப்ரல் 2015 அன்று, மமூது பலுசிஸ்தான் மோதலில் மாமா கதீர் போன்ற ஆர்வலர்களை உள்ளடக்கிய ஒரு விவாதத்தை நடத்தினார்.[5] நிகழ்வுக்குப் பிறகு, T2F இல் ஒரு கருத்தரங்கை நடத்திய பிறகு வீடு திரும்பும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.[6] 20 மே 2015 நிலவரப்படி, பாக்கித்தான் அதிகாரிகள் மகமதுவின் கொலைக்குக் காரணமான குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.[7] மமூது 'பாக்கித்தானின் தாராளவாத, நகர்ப்புற, உலகமயமாக்கப்பட்ட குடிசார் சமூகத்தின்' ஒரு பகுதியாக குறிப்பிடப்படுகிறார்.[8]

வாழ்க்கை[தொகு]

மமூது அநீதி மற்றும் பாகுபாட்டை கலைவதற்காகப் போராடினார், மேலும் விமர்சன சிந்தனையை ஊக்குவித்தார்; இவர் டான் இதழில் ஒரு நேர்காணலில் தனது மிகப்பெரிய கனவு "இணையத்தின் மூலம் உலகை சிறப்பாக மாற்ற வேண்டும்" என்று கூறினார்.[9] இவர் பொது நலனுக்காக ஒரு "சமூக தளத்தை" வழங்கும் அமைப்பான பீஸ்நிகேவினை நிறுவினார்.[10][11]

மமூது ஜஹீர் கிட்வாயுடன் "பிட்ஸ்" என்ற சிறிய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவினார், இவருடன் 14 வயதில் இருந்து மற்ற 2 நிறுவனங்களில் பணிபுரிந்தார், மேலும் இவரை இவரது பெற்றோர் மற்றும் வழிகாட்டியாக கருதினார். 2006 ஆம் ஆண்டில், இவர் பொது மன்ற விவாதங்கள், திரைப்படத் திரையிடல்கள், கவிதை எழுதுதல், சுயாதீன நகைச்சுவை மற்றும் நேரடி நாடகம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கஃபே தி செகண்ட் ஃப்ளோர் (T2F) ஐ நிறுவினார்.[12] குடிமை பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு துறைகளில் இருந்து மக்கள் ஒன்றாக இனைவதற்கான உள்நோக்கு வழிகள் வடிவமைக்கப்பட்டது.[13] மமூது, ஆயிஷா சித்திகா உள்ளிட்ட பொது நபர்களுக்கு விருந்தளித்தார், இவர் இராணுவ நிதி குறித்த சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதினார், இது சேவைகளிடை உளவுத்துறை இரண்டாம் தளத்தை தொடர்பு கொள்ள வழிவகுத்தது.[14]

இறப்பு[தொகு]

கொலைக்குப் பிறகான போராட்டம்.

24 ஏப்ரல் 2015 பிற்பகல் நேரத்தில், ஒரு கருத்தரங்கை நடத்திய பிறகு வீட்டிற்கு செல்லும் வழியில் மமூது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[15] துப்பாக்கி ஏந்தியவர்கள் (பின்னர் சாத் அஜீஸ் மற்றும் அலியூர் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டனர்) 9 மிமீ துப்பாக்கியால் இவளை நான்கு அல்லது ஐந்து முறை சுட்டனர், இவரது கார் T2F இலிருந்து 500 மீட்டருக்கும் குறைவான போக்குவரத்து விளக்கில் காத்திருந்த போது சுடப்பட்டார் .[15]

சான்றுகள்[தொகு]

  1. "Sabeen Mahmud Director T2F gunned down in Karachi". TheNews.com.pk. 25 Apr 2015.
  2. Siddiqui, Maleeha Hamid (2015-04-25). "Sabeen Mahmud — a profile". பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  3. "T2F | A Project of PeaceNiche". www.t2f.biz. Archived from the original on 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  4. 4.0 4.1 Zaidi, Hassan Belal (2015-04-25). "Sabeen, the one who never backed down". பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  5. Rafi, Haneen (2015-04-25). "T2F hosts the Balochistan discussion that others shy away from". பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  6. "T2F director Sabeen Mehmud shot dead in Karachi". 24 April 2015. http://tribune.com.pk/story/875375/t2f-director-shot-dead-in-karachi/. 
  7. "Arrested Safoora attack mastermind behind Sabeen's murder: Sindh CM". 20 May 2015. http://tribune.com.pk/story/889452/arrested-safoora-attack-mastermind-confesses-to-sabeen-mahmuds-murder/. 
  8. Soofi, Mayank Austen (2015-04-25). "Death of a liberal". பார்க்கப்பட்ட நாள் 2016-09-06.
  9. Saad Shafqat (18 Sep 2008). "Profile: 'Sabeen Mahmud': Striving For Better" (PDF). Dawn. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  10. "T2F: A pursuit of the heart". Tribune blog. 7 Aug 2010. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  11. Mahmud, Sabeen (2013). "Creative Karachi: Establishing an Arts & Culture Center for the World's Most Rapidly Growing City (Innovations Case Narrative:PeaceNiche and The Second Floor)". Innovations: Technology, Governance, Globalization 8 (3–4): 27–41. doi:10.1162/INOV_a_00185. பன்னாட்டுத் தர தொடர் எண்:1558-2477. http://www.mitpressjournals.org/doi/pdf/10.1162/INOV_a_00185. 
  12. "Sabeen Mahmud — a profile". DAWN. 24 Apr 2015.
  13. "Meet Sabeen Mahmud, a Woman Trying to Change Pakistan One Line of Code at a Time". The Mary Sue. 15 May 2013.
  14. "Pakistani Cafe Is Oasis In Desert Of Civil Discourse". NPR. 5 Jan 2013.
  15. 15.0 15.1 Zaman, Naziha Syed Ali | Fahim. "Anatomy of a murder". பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபீன்_மமூது&oldid=3929578" இலிருந்து மீள்விக்கப்பட்டது