உள்ளடக்கத்துக்குச் செல்

டான் (நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டான் (Dawn) என்பது பாகிஸ்தானிலிருந்து வெளிவருகின்ற மிகவும் பழமையான, அதிகம் வாசிக்கப்படுகின்ற ஒரு ஆங்கில நாளிதழாகும்.[1]

துவக்கம்

[தொகு]

இவ்விதழ் முகம்மது அலி ஜின்னாவால் புதுதில்லியில் (பிரித்தானியாவின் இந்தியா, இந்தியா) 26 அக்டோபர் 1941இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் இதழாகத் துவங்கப்பட்டது. இதன் முதல் இதழ் லடிபி அச்சகத்தில் 12 அக்டோபர் 1942இல் அச்சிடப்பட்டது.[2] முதலில் இது வார இதழாக வெளிவந்தது.[3].

பிற இதழ்கள்

[தொகு]

இவ்விதழ் பாகிஸ்தான் ஹெரால்டு பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இவர்கள் ஹெரால்டு என்னும் பருவ இதழையும், ஸ்பைடர் என்னும் தகவல் தொழில்நுட்ப இதழையும் அரோரா என்னும் விளம்பர ஊடக இதழையும் வெளியிடுகின்றனர்.

கிளைகள்

[தொகு]

இவ்விதழின் அலுவலகங்கள் கராச்சி, சிந்த், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் உள்ளன.[4]

இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "16 English newspapers published locally in Pakistan". Pakistan Times. Archived from the original on 2022-03-30. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  2. GoogleBooks, p.236
  3. Long, Roger D. (27 August 2017). "Dawn Delhi I: Genesis of a Newspaper" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1354278. பார்த்த நாள்: 27 August 2017. 
  4. "Our International Business Representatives". Dawn Media Group. Archived from the original on 30 June 2006. பார்க்கப்பட்ட நாள் 29 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_(நாளிதழ்)&oldid=3845057" இலிருந்து மீள்விக்கப்பட்டது