பழைய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி
பழைய நாடாளுமன்றக் கட்டிடம் | |
---|---|
சம்விதன் சதன் | |
பழைய நாடாளுமன்றக் கட்டிடம், கடமைப் பாதை இலிருந்து பார்க்கப்படுகிறது | |
முந்திய பெயர்கள் |
|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | ஓய்வுபெற்றது மற்றும் பாரம்பரிய மறுசீரமைப்புக்காகக் காத்திருக்கிறது |
வகை | பாரம்பரியம் |
கட்டிடக்கலை பாணி | லூட்டியன்சின் தில்லி |
இடம் | புது தில்லி |
முகவரி | நாடாளுமன்ற வீதி, புது தில்லி, தில்லியின் தேசிய தலைநகர் ஆட்சிப்பகுதி |
நகரம் | புது தில்லி |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 28°37′02″N 77°12′29″E / 28.6172°N 77.2081°E |
தற்போதைய குடியிருப்பாளர் | அருங்காட்சியகம் |
அடிக்கல் நாட்டுதல் | 1921 கன்னாட்டின் கோமகனால் |
கட்டுமான ஆரம்பம் | 1921 |
நிறைவுற்றது | 18 சனவரி 1927 |
திறக்கப்பட்டது | 18 சனவரி 1927 இந்திய வைசிராய் இர்வினால் |
உரிமையாளர் | இந்திய அரசு |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 790 |
பொது போக்குவரத்து அணுகல் | மத்திய செயலகம் |
பழைய நாடாளுமன்றக் கட்டிடமானது (அதிகாரப்பூர்வமாக சம்விதன் சதன் அரசியலமைப்பு கட்டிடம்),[1][2] 18 சனவரி 1927 மற்றும் 15 ஆகத்து 1947 க்கு இடையில் இந்தியாவின் பேரரச சட்டமன்ற அவையின் இருக்கையாகவும், 15 ஆகத்து 1947 மற்றும் 26 சனவரி 1950 க்கு இடையில் இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் இருக்கையாகவும், 26 சனவரி 1950 மற்றும் 18 செப்டம்பர் 2023 க்கு இடையில் இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கையாகவும் இருந்தது.
இந்த கட்டிடம் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களான எட்வின் லூட்டியன்சு மற்றும் எர்பெர்ட்டு பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் 1921 மற்றும் 1927 க்கு இடையில் கட்டப்பட்டது. இது சனவரி 1927 இல் பேரரச சட்டமன்ற அவையின் இருக்கையாக திறக்கப்பட்டது மற்றும் கவுன்சில் கட்டிடம் என்று அறியப்பட்டது.[3]
வரலாறு
[தொகு]புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான எட்வின் லூட்டியன்சு மற்றும் எர்பெர்ட்டு பேக்கர் ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்டினார். ஆறு வருடங்களில், 83 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதனை, அப்போதைய வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான இர்வின் பிரபு, 1927ஆம் ஆண்டு சனவரி 18 அன்று திறந்து வைத்தார்.[4] ஜனவரி 19, 1927 அன்று மத்திய சட்டமன்ற அவையின் மூன்றாவது அமர்வு இவ்வளாகத்தில் கூட்டப்பட்டது.[5]
வளாக அமைப்பு
[தொகு]அசோகச் சக்கரத்தின் வடிவத்தை ஒட்டி இவ்வளாகம் வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அவை, மத்தியச் சட்டப் பேரவை, இளவரசர்களின் அவை என மூன்று தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டது.
வளாகத்தைச் சுற்றி பெரிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கல்லால் ஆன வளாகத்தின் வேலி மதில் சாஞ்சி பெரிய தூபியை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுக் கூடம் / மத்திய மண்டபம்
[தொகு]நாடாளுமன்றத்தின் நடுக்கூடம் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூடத்தின் குவிமாடம் 98 அடி விட்டம் கொண்டுள்ள காரணத்தால், உலகின் பிரம்மாண்ட குவிமாடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கூடத்தின் வரலாற்றுச் சிறப்பினை பின்வரும் காரணங்களால் உணரலாம்:
- 1947-இல் ஆங்கிலேய அரசு இந்திய அரசியல் அதிகாரத்தை நேரு தலைமையிலான அரசிடம் இக்கூடத்தினின்று வழங்கியது
- 1947 முதல் 1949 வரை இக்கூடத்தில் இருந்து தான் இந்திய அரசியல் சாஸனம் வடிக்கப்பட்டது.
அரசியலமைப்பு நிர்ணய மன்றம் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்டு புனரமைக்கும் முன், 1946 வரை, இக்கூடம் அப்போதைய மத்திய சட்ட சபைக்கும், மாநிலங்கள் அவைக்குமான நூலகமாகப் பயன்படுத்தப்பட்டது, அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இக்கூடத்தில், டிசம்பர் 9, 1946 முதல் நவம்பர் 26, 1949 வரை கூடி, இந்திய அரசியலமைப்பை வரைந்தது. தற்போது நடுக்கூடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிகழும் முதல் அமர்வின் போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இக்கூடத்தினின்று உரை வழங்குவார். மேலும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அயல் நாட்டுத் தலைவர்கள் இரு அவைகளுக்கும் வழங்கும் உரையும் இங்கிருந்தே வழங்கப்படும்.
புதுக் கட்டிடத்திற்கான திட்டம்
[தொகு]தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டிடம், எண்பத்தைந்தாண்டு காலப் பழைமை வாய்ந்தது; பாரம்பரியச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. இடப்பற்றாக்குறையையும், கட்டமைப்பு வலுவிழந்து வரும் காரணத்தையும் கருத்தில் கொண்டு புதிய வளாகம் ஒன்றை நிறுவ ஆலோசிக்கப்பட்டுள்ளது.[6]
இதன் பொருட்டு முன்னாள் மக்களவைத் தலைவரான திருமதி. மீரா குமாரின் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.[7]
2001 தீவிரவாத தாக்குதல்
[தொகு]2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது டெல்லியில் உள்ள இந்திய பாராளுமன்றம் கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர் . மற்றும் இந்த தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Old Parliament Building To Be Called As 'Samvidhan Sadan'".
- ↑ "Official Notification by Loksabha Secretariat on Renaming of the building previously known as Parliament House to Samvidhan Sadan". X (formerly Twitter) (in ஆங்கிலம்). All India Radio. 2023-09-19. பார்க்கப்பட்ட நாள் 2023-09-21.
- ↑ "From Council House to Indian Parliament building after Independence: The history behind the edifice". The Indian Express (in ஆங்கிலம்). 2023-05-27. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
- ↑ "இந்திய நாடாளுமன்ற வளாகம்" (PDF). Archived from the original (PDF) on 2017-07-09. பார்க்கப்பட்ட நாள் 06-04-2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "History of the Parliament of Delhi". delhiassembly.nic.in. Archived from the original on 22 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Delhi may see a new Parliament building". timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120715063551/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-13/india/32662416_1_heritage-building-parliament-house-mantralaya-fire. பார்த்த நாள்: 13 December 2013.
- ↑ Firstpost (2012-07-13). "Speaker sets up panel to suggest new home for Parliament". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
- ↑ "Terrorists attack Parliament; five intruders, six cops killed". rediff.com. 13 December 2001. http://www.rediff.com/news/2001/dec/13parl1.htm. பார்த்த நாள்: 13 December 2013.