எட்வின் லூட்டியன்சு
எட்வின் இலாண்ட்சீயர் லூட்யன்சு | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | பிரித்தானியர் |
பிறப்பு | இலண்டன், ஐக்கிய இராச்சியம் | 29 மார்ச்சு 1869
இறப்பு | 1 சனவரி 1944 இலண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை 74)
பாடசாலை | கலைக்கான அரசக் கல்லூரி |
பணி | |
கட்டிடங்கள் | |
திட்டங்கள் | புது தில்லி |
சர் எட்வின் இலாண்ட்சீயர் லூட்யன்சு, (Edwin Landseer Lutyens, OM|KCIE|RA|FRIBA, மார்ச் 29, 1869 – சனவரி 1, 1944) பிரித்தானிய கட்டிடக் கலைஞர் ஆவார்; மரபுசார் கட்டிடப்பாணிகளை தற்காலத்திற்கேற்ப கலைநயத்துடன் ஏற்று வடிவமைப்பதில் புகழ்பெற்றவர். பல இங்கிலாந்து நாட்டு இல்லங்களை வடிவமைத்துள்ளார்.
லூட்யன்சு "பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களில் மிகப் பெரியவராக"[1] கருதப்படுகின்றார். இந்திய அரசின் தலைமையிடமாக புது தில்லியை வடிவமைப்பதிலும் கட்டமைப்பதிலும் இவரது பங்களிப்பிற்காக பெரிதும் அறியப்படுகின்றார்.[2] இதனை அங்கீகரிக்கும் வண்ணம் புது தில்லி "லூட்யன்சின் தில்லி" எனவும் அழைக்கப்படுகின்றது. சர் எர்பெர்ட்டு பேக்கருடன் ஒருங்கிணைந்து புது தில்லியிலுள்ள இந்தியாவின் வாயில் போன்ற பல நினைவகங்களுக்கு கட்டிட வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்; தற்போது ராஷ்டிரபதி பவன் எனப்படும் தலைமை ஆளுநரின் மாளிகையையும் வடிவமைத்துள்ளார்.[3][4]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "The Memorial to the Missing of the Somme" 2006. Gavin Stamp.
- ↑ Architecture, power, and national ... – Google Books. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
- ↑ European cities & technology ... – Google Books. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
- ↑ A history of interior design – Google Books. Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.