சந்தேரி யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தேரி யுத்தம் (Battle of Chanderi) அல்லது சந்தேரி முற்றுகை என்பது கன்வா யுத்ததிற்கு பிறகு நடைபெற்ற ஒரு முற்றுகையாகும். இதில் முகலாய பேரரசர் பாபர் இராசபுத்திர கூட்டமைப்பை தோற்கடித்தார். வட இந்தியாவில் முகலாய ஆட்சியை தீர்க்கமாக நிறுவினார்.[1] மீண்டும் வளர்ந்து வந்த இராசபுத்திர சக்திகளை ஒடுக்கிய அதே நேரத்தில் வட இந்தியாவின் முதன்மை நிலைக்காக இந்த யுத்தமானது இராசபுத்திரர்கள் மற்றும் முகலாயர்கள் இடையே நடைபெற்றது.[1] செய்தியை அறிந்த இராணா சங்கா பாபருடனான தன்னுடைய சண்டையை மீண்டும் புதுப்பிப்பதற்காக போர் ஆயத்தங்களை மீண்டும் தொடங்கினார். பாபர் இராணா சங்காவை தனிமைப்படுத்த முடிவு செய்தார். மல்வாவின் ஆட்சியாளரும், இராணா சங்காவின் கூட்டாளியுமான மேதினி ராயை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடிவு செய்தார்.[2][3] இறுதியாக திசம்பர் 1527இல் மல்வாவில் இருந்த சந்தேரி கோட்டையை நோக்கி ஒரு சுற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பாபர் அணி வகுத்தார். சந்தேரியானது மல்வா இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது.[4] 20 சனவரி 1528 அன்று சந்தேரியை அடைந்த பிறகு, அமைதி நடவடிக்கைக்காக சந்தேரியை தனக்கு கொடுத்தால் சம்சபாத்தை மேதினி ராய்க்கு கொடுக்க முன் வருவதாக பாபர் கூறினார். ஆனால் ராய் இதை நிராகரித்தார்.[5]

சந்தேரியின் வெளிப்புற கோட்டையானது பாபரின் இராணுவத்தால் இரவில் கைப்பற்றப்பட்டது. அடுத்த நாள் காலையில் மேல் கோட்டையானது கைப்பற்றப்பட்டது. தாக்குதல் தொடங்கி 1 மணி நேரத்திற்குள்ளாகவே மேற்புறம் உள்ள கோட்டை வீழ்ந்ததை கண்டு பாபர் ஆச்சரியத்தை வெளிக்காட்டினார்.[2]

கன்வா யுத்தத்தைப் போலவே கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளைக் கொண்டு ஒரு கோபுரத்தை அமைக்க பாபர் ஆணையிட்டார். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. தன் எதிரிகளுக்கு எதிராக தைமூரும் இதே போன்ற பழக்க வழக்கத்தை பின்பற்றினார். சந்திரா என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி, இதன் பொருளானது வெற்றியைக் குறித்தல் மற்றும் எதிரிகளை பயங்கரவாதத்திற்கு உள்ளாக்குதல் ஆகியவை ஆகும். பசௌர் என்ற இடத்தில் ஆப்கானியர்களுக்கு எதிராகவும் இதே போன்ற உத்தியை பாபர் முன்னர் பயன்படுத்தி இருந்தார்.[3][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sharma 1954, ப. 8.
  2. 2.0 2.1 Lane-pool, Stanley. "Babar". பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  3. 3.0 3.1 Chandra, Satish (2006). Medieval India: From Sultanat to the Mughals (1206–1526). Vol. 2. Har-Anand Publications.
  4. Chaurasia 2002, ப. 156.
  5. Sharma 1954, ப. 43.
  6. Chandra, Satish (2006). Medieval India: From Sultanat to the Mughals (1206–1526). Vol. 2. Har-Anand Publications.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேரி_யுத்தம்&oldid=3777060" இலிருந்து மீள்விக்கப்பட்டது