சந்திரயான் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரயான் திட்டம்
Chandrayaan programme
ஜி. எஸ். எல். வி மார்க் III M1 சந்திரயான்-2 உடன் புறப்படுகிறது (22 சூலை 2019)
திட்ட மேலோட்டம்
நாடுஇந்தியா
பொறுப்பான நிறுவனம்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ)
நோக்கம்நிலாத் தேட்டம்
தற்போதைய நிலைசெயலில் உள்ளது
திட்ட வரலாறு
திட்டக் காலம்2008–இன்று
முதல் பறப்புசந்திரயான்-1, அக்டோபர் 22, 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-10-22)
அண்மைய பறப்புசந்திரயான்-3
ஊர்தித் தகவல்கள்
ஏவுகலம்(கள்)

சந்திரயான் திட்டம் (Chandrayaan programme) அல்லது இந்திய நிலாத் தேட்டத் திட்டம் (Indian Lunar Exploration Programme) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இசுரோ) மேற்கொண்டுவரும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் நிலா வட்டணைக்கலம், மொத்துகலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்கலம்(ஊர்தி) ஆகியன அடங்கும்.

திட்ட அமைப்பு[தொகு]

சந்திரயான் என்ற இந்திய நிலா ஆய்வுத் திட்டம் பல பணிகளைக் கொண்ட திட்டமாகும். As of செப்டம்பர் 2019 நிலவரப்படி, இசுரோவின் பிஎஸ்எல்வி ஏவூர்தியைப் பயன்படுத்தி, ஒரு மொத்துகல ஆய்வுக் கருவியுடன் ஒரு சுற்றுக்கலமும் நிலாவுக்கு அனுப்பப்பட்டது. சுற்றுக்கலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்தி ஆகியவற்றைக் கொண்ட இரண்டாவது விண்கலம் 2019 சூலை 22 அன்று எல்.வி.எம்-3 ஏவூர்தியைப் பயன்படுத்தி ஏவப்பட்டது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எசு. சோமநாத், சந்திரயான் திட்டத்தில் சந்திரயான்-3 மற்றும் பல தொடர் பணிகள் இருக்கும் என்று கூறினார்.[3] சந்திரயான்-3 பணி 2023 சூலை 14 இல் எல்விஎம்-3 ஐப் பயன்படுத்தி ஏவப்பட்டது, இது 2023 ஆகத்து மாதத்தில் அது நிலவின் மேற்பரப்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டம்-1[தொகு]

காண்க, சந்திரயான்-1

கட்டம்-2[தொகு]

காண்க, சந்திரயான்-2

கட்டம்-3[தொகு]

காண்க, சந்திரயான்-3

  1. "Chandrayaan-2 mission cheaper than Hollywood film Interstellar - Times of India". 20 February 2018. https://timesofindia.indiatimes.com/home/science/chandrayaan-2-mission-cheaper-than-hollywood-film-interstellar/articleshow/62990361.cms. 
  2. "Question No. 2222: Status of Chandrayaan Programme" (PDF). Archived from the original (PDF) on 2017-08-03.
  3. "Episode 90 – An update on ISRO's activities with S Somanath and R Umamaheshwaran". AstrotalkUK. October 24, 2019. பார்க்கப்பட்ட நாள் October 30, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரயான்_திட்டம்&oldid=3789478" இலிருந்து மீள்விக்கப்பட்டது