ஜி. எஸ். எல். வி மார்க் III
ஜி. எஸ். எல். வி மார்க் III | |
![]() ஜி. எஸ். எல். வி மார்க் III டி2 - ஜிசாட்-29 உடன் | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | Heavy-Lift Launch System |
அமைப்பு | இஸ்ரோ |
நாடு | ![]() |
அளவு | |
உயரம் | 42.4 m |
விட்டம் | 4.0 m |
நிறை | 630,000 கிலோகிராம் |
படிகள் | 2 |
கொள்திறன் | |
Payload to LEO | 8,000 கிலோகிராம்[1] |
Payload to GTO |
4,000 கிலோகிராம் [1][2] |
ஏவு வரலாறு | |
நிலை | செயலில் |
ஏவல் பகுதி | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
மொத்த ஏவல்கள் | 3 |
வெற்றிகள் | 3 |
முதல் பயணம் | 18 டிசம்பர் 2014 (துணை சுற்றுப்பாதை) 5 ஜூன் 2017 (சுற்றுப்பாதை) |
Boosters (Stage 0) - S-200 | |
No boosters | 2 |
Engines | 1 திட எரிபொருள் |
Thrust | 7698 கிலோ நியூட்டன் |
குறித்த உந்தம் | 269 வினாடிகள் |
எரிநேரம் | 108 வினாடிகள் |
எரிபொருள் | திட எரிபொருள் |
First Stage - L-110 | |
Engines | 2 விகாஸ் |
Thrust | 1,600 கிலோ நியூட்டன் |
குறித்த உந்தம் | 300 sec |
எரிநேரம் | 220-230 வினாடிகள் |
எரிபொருள் | UDMH + N2O4 |
Second Stage - C-25 | |
Engines | 1 CE-20 |
Thrust | 200 கிலோ நியூட்டன் (20 Tf) |
குறித்த உந்தம் | 450 வினாடிகள் |
எரிநேரம் | 720 வினாடிகள் |
எரிபொருள் | LOX/LH2 |
ஜி. எஸ். எல். வி மார்க் III (The Geosynchronous Satellite Launch Vehicle Mark III) ஒரு செயற்கைக்கோள் ஏவுகணை ஆகும். இஸ்ரோ (ISRO)வினால் தயாரிக்கப்பட்ட இது ஒரு முறை மட்டுமே ஏவும் மீளப்பாவிக்க இயலாத வகை செலுத்து வாகனம் ஆகும்.[3][4] 5 ஜூன் 2017 அன்று 17:28 மணியளவில் இந்தியாவின் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.[5] இந்தச் செலுத்து வாகனத்தின் மூலம் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த இயலும். மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் இயலும். இச்செலுத்து வாகனத்தின் மூன்றாவது அடுக்கில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக எடையுடையவற்றை உந்தித் தள்ள இயலும்.[6][7]
வரலாறு[தொகு]
ஜி. எஸ். எல். வி மார்க் III செயற்கைக்கோளின் மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 என திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது.[8] 15 ஏப்ரல் 2010 ஜி. எஸ். எல். வி மார்க் II செலுத்து வாகனத்தின் மேலடுக்கு கடுங்குளிர் இயந்திரம் சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.[8]
கடுங்குளிர் இயந்திர மேம்பாடு[தொகு]
1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு இன்சாட்-2 வகை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அனுமதி அளித்தது. இவ்வகை செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த கடுங்குளிர் இயந்திரம் தேவையானதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து இவ்வகை இயந்திரங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது.[9] இதன் காரணமாக ரஷ்யாவின் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே கடுங்குளிர் இயந்திரம் தயாரிக்கப்பட்டது.[10]
ஒப்பீட்டு செலுத்து வாகனங்கள்[தொகு]
ஜி.எஸ்.எல்.வி மார்க் III செலுத்து வாகனத்தை கீழ்க்கண்ட செலுத்து வாகனங்களுடன் ஒப்பிடலாம்,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 https://www.isro.gov.in/launchers/gslv-mk-iii
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;bharat
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Cryogenic rocket engine has been developed from scratch: Isro chief".
- ↑ "India launches 'monster' rocket".
- ↑ "India's heaviest rocket, GSLV Mk-III, successfully launched" (in en). NewsBytes. https://www.newsbytesapp.com/timeline/India/7657/44658/gslv-mark-iii-india-s-heaviest-rocket.
- ↑ "Indian Space Research Organisation preparing for three more PSLV launches". English: The Hindu. 2011-04-29. 15 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ GSLV MkIII, the next milestone : Interview: K. Radhakrishnan Frontline 7 February 2014
- ↑ 8.0 8.1 "India's GSLV Mk-3 First Flight Pushed Back to April 2014". Sawfnews. 4 April 2013. 10 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ How ISRO developed the indigenous cryogenic engine
- ↑ "GSLV Mk III breaks Isro's jinx of failure in debut rocket launches".