சந்திரசேகர் கோவில், கபிலாஷ்
சந்திரசேகர் கோவில் ,கபிலாஷ் | |
---|---|
![]() கபிலாஷ் கோவில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஒடிசா |
மாவட்டம்: | டேங்கானாள் |
ஆள்கூறுகள்: | 20°40′55.4″N 85°45′47.13″E / 20.682056°N 85.7630917°E |
கோயில் தகவல்கள் |
மகாதேவர் சந்திரசேகர் கோவில் (Mahadev Chandrashekhar Temple) என்றும் கபிலாஷ் கோவில்என்றும் அழைக்கப்படும் இக்கோவில் இந்தியாவின் ஒடிசாவில் உள்ள தேன்கனல் நகரின் வடகிழக்கு பகுதியில் மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
அமைவிடமும் கட்டிடக்கலையும்
[தொகு]கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2239 அடி உயரத்தில் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பிரதான கோபுரம் 60 அடி உயரம் கொண்டது. கோவிலுக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று 1352 படிகள் ஏறுவது, மற்றொன்று பாரபங்கி வழியாக அல்லது முறுக்கு வழியில் பயணிப்பது. கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கீழைக் கங்க மன்னர் முதலாம் நரசிங்க தேவன் பொ.ச. 1246 இல் சந்திரசேகரருக்கு கோயிலைக் கட்டினார்.[2] கோயிலின் இடதுபுறத்தில் பயமரத்த குண்டமும், வலதுபுறத்தில் மரிச்சி குண்டமும் உள்ளன. இக்கோயிலில் மரத்தாலான ஜெகமோகனம் உள்ளது. பிள்ளையார், முருகன், கங்காதேவி முதலியோர் கோயிலில் காணப்படுகின்றனர். ஜெகநாதர் முக்கிய மூர்த்தியாக கோவிலில் நிறுவப்பட்டுள்ளார். விசுவநாதர் கோயிலும் கபிலாஷில் அமைந்துள்ளது. சில அறிஞர்களின் கூற்றுப்படி, இந்த கோவில் சந்திரசேகர் கோயிலை விட பழமையானது. எனவே இது புத்த லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. கபிலாஷ் பிதா மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. பாரம்பரியம் இதை கபிலரின் ஆசிரமம் என்று விவரிக்கிறது. சில அறிஞர்கள் இது சிவபெருமானின் இரண்டாவது கைலாசம் என்கின்றனர். பாகவதத்துக்கு விளக்கம் எழுதிய சிறீதர் சுவாமிகள் அங்கேயே தங்கினார். வளாகத்தில் சில மடங்களும் உள்ளன.
கோவிலில் ஏற்பட்ட கொள்ளை
[தொகு]2015 நவம்பரில் [3] கோவிலின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த பிள்ளையார், துர்க்கை, பைரவி என மூன்று பழமையான கற்சிலைகள் திருடப்பட்டன.
புகைப்படங்கள்
[தொகு]-
கபிலாஷ் கோவில்
-
கபிலாஷ் கோவில்
-
கபிலாஷ் கோவில்
-
கபிலாஷ் கோயிலுக்குச் செல்லும் சாலை
-
மலைக்காட்சி
சான்றுகள்
[தொகு]- ↑ "Kapilash | Dhenkanal District : Odisha | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-08.
- ↑ "Kapilash Temple". Daily India Mail. Retrieved 14 June 2016.
- ↑ "Three 700 year old idols stolen from Chandrasekhar Temple in Kapilash, Odisha". Odisha sun Times. 26 November 2015. http://odishasuntimes.com/2015/11/26/700-year-old-idols-stolen-from-chandrasekhar-temple-in-kapilash-odisha/.