சத்திரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:05, 15 திசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Protected "சத்திரியர்": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)))
கௌதம புத்தர் புத்த சமய நிறுவனரான கௌதம புத்த சத்திரியராக பிறந்தவர்

சத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், கிருஷ்ணன் ஆகியோரும், புத்த சமய நிறுவனரான கௌதம புத்தர், சமண சமயத்தைத் தோற்றுவித்த சத்திரியர் ஆகியோரும் சத்திரியர்களே.

சத்திரியர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர். தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினர் மட்டுமே சத்திரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரியர்&oldid=2876143" இலிருந்து மீள்விக்கப்பட்டது