சட்டத்தில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டத்தில் பெண்கள் (Women in law) சட்ட ரீதியிலான தொழில்களில் ஈடுபடும் பெண்களை இது குறிக்கிறது. இதில் தொடர்பான தொழில்களில், வழக்கறிஞர்கள் பார் அட் லா,சட்ட ஆலோசகர்கள், மாவட்ட குற்றவியல் நீதிபதி, தலைமை நீதிபதி, துணை நீதிபதி, பெண்ணிய சட்ட கோட்பாட்டளர்கள் , சட்டக் கல்வி பேராசிரியர்கள், சட்டப் பள்ளி தலைவர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியது ஆகும்.

பிரதிநிதித்துவம் மற்றும் வேலை நிலைமைகள்[தொகு]

அமெரிக்கா[தொகு]

அமெரிக்க சட்டப் பேரவை 2014 ஆம் ஆண்டில் அறிவித்த அறிக்கையின் படி, பெண்கள் சட்டத் தொழிலில் 34% மற்றும் ஆண்கள் 66% ஆக இருந்தனர்.[1] தனியார் நடைமுறை சட்ட நிறுவனங்களில், பெண்கள் 20.2% உறுப்பினர்களாகவும், 17% ஒப்புரவுப் பண்பு பங்களிப்பாளர்களாகவும் , 200% பெரிய சட்ட நிறுவனங்களில் 4% மேலாளர் பங்களிப்பாளர்களாகவும் உள்ளனர்.[1] 2014 ஆம் ஆண்டில் பார்ச்சூன் 500 நிறுவனங்களில், 21% பொது ஆலோசகர்கள் பெண்களும் 79% ஆண்களும் ஆவர். 2009 இல், பெண்கள் 21.6% சட்டப் பள்ளி துறைத் தலைவராகவும், 45.7% இணை, துறைத் தலைவராகவும் அல்லது துணை துறைத் தலைவராகவும், 66.2% உதவி துறைத் தலைவராகவும் இருந்தனர். சட்டப் பள்ளி சட்ட மறுஆய்வுகளில் பெண்களுக்கு சிறந்த பிரதிநிதித்துவம் உள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் அமெரிக்க உலக மற்றும் செய்தி அறிக்கைகளால் தரவரிசைப்படுத்தப்பட்ட முதல் 50 பள்ளிகளில், பெண்கள் தலைமைப் பதவிகளில் 46% மற்றும் தலைமை ஆசிரியர் பதவிகளில் 38% உள்ளனர்.[1]

தேசிய பெண்கள் சட்ட மையம் (அமெரிக்கா)[தொகு]

தேசிய மகளிர் சட்ட மையம் (NWLC) 1972 இல் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க இலாப நோக்கற்ற அமைப்பாகும் .இந்த மையம் வழக்குகள் மற்றும் கொள்கை முன்முயற்சிகள் மூலம் பெண்களின் உரிமைகளை ஆதரிக்கிறது. சட்டம் மற்றும் சமூகக் கொள்கை மையத்தில் இருக்கும் பெண் நிர்வாக ஊழியர்கள் மற்றும் சட்ட மாணவர்களின் உயர்த்த ஊதியத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரியபோது இந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கியது. மார்சியா கிரீன்பெர்கர் 1972 இல் வேலைக்கு அமர்த்தப்பட்டார் மற்றும் நான்சி டஃப் காம்ப்பெல் அவருடன் 1978 இல் சேர்ந்தார்.[2] 1981 இல், இருவரும் இணைந்து இந்த திட்டத்தை தனி தேசிய மகளிர் சட்ட மையமாக மாற்ற முடிவு செய்தனர்.[2][3]

மகளிர் சட்டக் கல்வி மற்றும் செயல் நிதி (கனடா)[தொகு]

லீஃப் என்ற சுருக்கப்பெயரால் குறிப்பிடப்படும் மகளிர் சட்டக் கல்வி மற்றும் செயல் நிதியம் "... சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் சமத்துவ உரிமைகளை உறுதி செய்வதற்காக கனடாவில் ஏற்படுத்தப்பட்ட ஒரே தேசிய அமைப்பு." ஆகும் .[4] இந்த அமைப்பு ஏப்ரல் 19, 1985 இல் நிறுவப்பட்டது , உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் கனேடிய சாசனத்தின் பிரிவு 15 இயற்றப்பட்டதன் விளைவாக லீஃப் உருவாக்கப்பட்டது. லீஃப் சட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது, மற்றும் பெண்களின் பிரச்சினைகளில் மேல்முறையீடு மற்றும் கனடாவின் உச்சநீதிமன்ற வழக்குகளில் தலையிடுகிறது. கனடாவின் உச்ச நீதிமன்றத்தின் பல குறிப்பிடத்தக்க முடிவுகளில் லீஃப் ஒரு இடைவாதியாக இருந்துள்ளது, குறிப்பாக பிரிவு 15 சாசன சவால்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் போது.

சட்டம் மற்றும் வழக்குகளில் பெண்கள் (இந்தியா)[தொகு]

சட்டத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாட்டைக் கையாள்வதற்காக 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களால் இந்திய சட்டத்தில் பெண்கள் மற்றும் வழக்காடல் அமைப்பு (வில்) உருவாக்கப்பட்டது.[5] இந்திய உச்ச நீதிமன்றம் நீதிபதியான ரஞ்சனா தேசாய் மேற்பார்வையின் கீழ் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது.[6] தொழில்முறை ஆதரவு, வழக்காடல் திறன்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களின் வளர்ச்சிக்கான வழிகள் பற்றிய விவாதத்திற்கான ஒரு தளம் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் (டெல்லி) நீதிபதி ஹிமா கோலி, "உயர் பதவிகளை அடைந்த" மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட பயிற்சியாளர்களுக்கான அமைப்பை மீண்டும் வழங்குவதற்கான ஒரு வழியாக இது இருக்கும் என வரையறுத்தார்.[5]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "A Current Glance at Women in the Law" (PDF). Americanbar.com. July 2014. பார்க்கப்பட்ட நாள் June 19, 2016.
  2. 2.0 2.1 Naili, Hajer (January 4, 2012). "21 Leaders 2012 - Seven Who Leverage Power". Women's eNews. பார்க்கப்பட்ட நாள் July 10, 2015.
  3. "Marcia D. Greenberger, Co-President | National Women's Law Center". Nwlc.org. Archived from the original on ஜூலை 11, 2015. பார்க்கப்பட்ட நாள் July 10, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Women's Legal Education and Action Fund". Women's Legal Education and Action Fund. பார்க்கப்பட்ட நாள் April 13, 2012.
  5. 5.0 5.1 "Women lawyers have to work more to prove themselves: SC Judge Desai". Indian Express. September 6, 2014. http://indianexpress.com/article/cities/delhi/women-lawyers-have-to-work-more-to-prove-themselves-sc-judge-desai/. 
  6. "Women have broken barriers of gender discrimination: SC judge". Zee News. September 6, 2014. http://zeenews.india.com/news/nation/women-have-broken-barriers-of-gender-discrimination-sc-judge_1465598.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்டத்தில்_பெண்கள்&oldid=3929520" இலிருந்து மீள்விக்கப்பட்டது