கனடாவின் உச்ச நீதிமன்றம்
Appearance
கனடாவின் உச்ச நீதிமன்றம் கூர் சுப்ரெம் டு கனடா (கனடிய பிரான்சியம்) | |
---|---|
கனடிய உச்ச நீதிமன்றத்தின் முத்திரைப் பட்டை | |
நிறுவப்பட்டது | 8 ஏப்ரல் 1875 |
அமைவிடம் | ஒட்டாவா |
புவியியல் ஆள்கூற்று | 45°42'46.021"N 74°0'21.388"W |
நியமன முறை | கனடாவில் நீதியரசர்களின் நியமனம் |
அதிகாரமளிப்பு | அரசியலமைப்புச் சட்டம், 1867 மற்றும் உச்ச நீதிமன்றச் சட்டம் |
நீதியரசர் பதவிக்காலம் | 75 அகவையில் கட்டாய ஓய்வு |
இருக்கைகள் எண்ணிக்கை | 9 |
வலைத்தளம் | www.scc-csc.ca |
கனடாவின் தலைமை நீதிபதி | |
தற்போதைய | பெவர்லி மக்லாக்லின் |
பதவியில் | 7 சனவரி 2000 |
கனடாவின் உச்ச நீதிமன்றம் (Supreme Court of Canada, பிரெஞ்சு மொழி: Cour suprême du Canada) கனடாவின் மிகவும் உயரிய நீதிமன்றமாகும். கனடிய நீதி முறைமையில் மேல்முறையீடுகளுக்கான இறுதி நீதிமன்றமாகும்.[1] இந்த நீதிமன்றம் ஆண்டொன்றுக்கு மாகாண, ஆட்பகுதி மற்றும் கூட்டரசின் மேல் முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தீர்வு கிடைக்காத 40 முதல் 75 வாதிகளுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்குகின்றது. இதன் முடிவுகள் கனடியச் சட்டங்களின் இறுதி வெளிப்பாடாகவும் பயன்பாடாகவும் அனைத்து கீழ் நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் உள்ளன; இந்த தீர்ப்புகளுக்கு மேலோங்கும் வண்ணமோ செயலற்றதாக்கும் வண்ணமோ நாடாளுமன்றத்திலும் மாகாண சட்டப்பேரவைகளிலும் கனடிய உரிமை சுதந்திரப் பட்டயம் பிரிவு 33படி சட்டங்கள் இயற்றப்படலாம் (மீச்செல் பிரிவு).
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Role of the Court". Supreme Court of Canada. 23 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.