சங்கல் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கல் கல்வெட்டு
சங்கல் கல்வெட்டு ஜகார்த்தாவின் இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
செய்பொருள்எரிமலைப் படிகப்பாறைக் கல்
எழுத்துபல்லவ எழுத்துமுறையில் உள்ள சமசுகிருத கல்வெட்டு
உருவாக்கம்கி.பி. 732
கண்டுபிடிப்புகதிலுவிஹ் கிராமத்தில் உள்ள வுக்கிர் கோவில் வளாகம், சலாம், மகேலாங் ரீஜென்சி, நடுச் சாவகம், இந்தோனேசியா
தற்போதைய இடம்இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா

சங்கல் கல்வெட்டு (Canggal inscription) என்பது 732 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட சமசுகிருத கல்வெட்டு ஆகும். இது இந்தோனேசியாவின் நடுச் சாவகத்தில் உள்ள சலாம், மாகெலாங் ரீஜென்சியில் உள்ள கதிலுவிஹ் என்ற கிராமத்தில் உள்ள வுக்கிர் கோவில் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு பல்லவ எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சஞ்சயனின் ஆணையைக் கொண்டதாக உள்ளது. அதில் அவர் தன்னை மாதரம் இராச்சியத்தின் உலகளாவிய ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

சஞ்சயனின் உத்தரவின் பேரில் குஞ்சரகுஞ்ச நாட்டில் இலிங்கம் அமைக்கப்பட்டதை கல்வெட்டு விவரிக்கிறது. இலிங்கம் யாவா ( ஜாவா ) என்ற உன்னத தீவில் அமைந்துள்ளது. கல்வெட்டானது அப்பகுதி "தானியங்களும், தங்கச் சுரங்கங்களும் நிறைந்தது" என்று விவரிக்கிறது. [1] :87–88யாவத்வீபம் ("ஜாவா தீவு"), நீண்ட காலமாக ஞானம் மற்றும் நல்லொழுக்கமுள்ள மன்னர் சன்னாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு ஒற்றுமையின்றி வீழ்ந்தது. குழப்பமான காலகட்டத்தின் நடுவில், சன்னகாவின் (சன்னாவின் சகோதரி) மகன் சஞ்சயன் அரியணை ஏறினார். சஞ்சயன் புனித நூல்கள், தற்காப்புக் கலைகள் போன்றவற்றை கற்றவராக இருந்தார். இராணுவ வலிமையால் அண்டை பகுதிகளை கைப்பற்றிய பிறகு அவரது ஆட்சி அமைதியாகவும் வளமாகவும் இருந்தது. [2] என்ற குறிப்புகள் உள்ளன.

கல்வெட்டு குஞ்சரகுஞ்சம் தேசத்தை குறிப்பிடுகிறது, ஒருவேளை அது "குஞ்சரவின் துறவு நிலம்" என்று பொருள்படும். இது தென்னிந்தியாவில் மதிக்கப்படும் இந்து துறவியான அகத்தியரின் துறவு என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இராமாயணத்தில் குஞ்சரா அகத்தியர் வசித்த இடங்களில் ஒன்று என்ற குறிப்பு உள்ளது.

சஞ்சயன், சன்னா, சன்னாஹா என்ற பெயர்கள் கரிதா பராஹ்யங்கன் என்ற கையெழுத்துப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிற்கால நூலாகும். இது இந்த வரலாற்று நபரைக் குறிப்பதாக கூறப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  2. Drs. R. Soekmono (1973). Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed.. Penerbit Kanisius. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கல்_கல்வெட்டு&oldid=3462358" இலிருந்து மீள்விக்கப்பட்டது