சங்கல்தன் சுரங்க இருப்புப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கல்தன் சுரங்க இருப்புப்பாதை
மேலோட்டம்
தடம்சம்மு உதாம்பூர் சிறிநகர் பாரமுல்ல தொடருந்து பாதை[1]
அமைவிடம்சம்மு காசுமீர்
தற்போதைய நிலைமுடிவுற்றது
தொடக்கம்சங்கல்தன்
முடிவுகோகில்
செய்பணி
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
Trafficதொடருந்து
தொழினுட்பத் தகவல்கள்
பாதை நீளம்7.1 km (4.4 mi)
இருப்புப்பாதைகள்ஒற்றைத் தடம்
தட அளவு1,676mm (அகலப் பாதை)
தொழிற்படும் வேகம்up to 75 km/h (47 mph)

சங்கல்தன் சுரங்க இருப்புப்பாதை (Sangaldan Tunnel) என்பது இந்தியாவில் ஜம்மு காசுமீரில் அமைந்துள்ள இருப்புப்பாதை ஆகும். இது 7.1 கி.மீ. நீளமுடையது. இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையின் கட்ரா-பனிஹால் பகுதிக்கு இடையே உள்ள தொடருந்து சுரங்கப்பாதை ஆகும். இது ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள, மத்திய இமயமலையின் சங்கல்தன் நகரின் வடக்கே, இராம்பன் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இச்சுரங்கப்பாதை 4 திசம்பர் 2010[2] கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

பின்னணி மற்றும் சவால்கள்[தொகு]

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே நிறுவனம், இதன் உதம்பூர் - சிறிநகர் - பாரமுல்லா தொடருந்து இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதையினை நிறுவியது. சுரங்கப்பாதை மோசமான புவியியலின் அடுக்கு வழியாகச் செல்கிறது. இது முரி உருவாக்கம் கொண்டது. துரப்பணம் மற்றும் குண்டுவெடிப்பு முறையைப் பயன்படுத்தி சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. கட்டுமான கட்டடப் பணிகள் சுரங்கப்பாதை சரிவு பாதிக்கப்பட்டது.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]