சங்கரராமேஸ்வரர் கோயில்
Appearance
சங்கரராமேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரத்தின் மையப் பகுதியான சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் பெயர் சங்கரராமேஸ்வரர்; அம்பிகை பெயர் பாகம்பிரியாள். நான்கு ஏக்கர் பரப்பில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோயில் 500 ஆண்டுகள் பழைமையானது.[1]இந்து அறநிலையத் துறையின் மேற்பார்வையில் செயல்படும் இக்கோயிலில் நாள்தோறும் 5 வேளை பூஜைகள் நடைபெறுகிறது.
நடை திறந்திருக்கும் நேரம்
[தொகு]காலை 6.00 – 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிக்கு பள்ளியறை புஜையுடன் நடை சாத்தப்படும்
திருவிழாக்கள்
[தொகு]- சித்திரைத் திருவிழாவின் போது தேரோட்டம்[2]
- தைப்பூசம் அன்று தெப்பத் திருவிழா[3]
- மாசியில் மகா சிவராத்திரி
- ஐப்பசியில் திருக்கல்யாணம்
- கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்துதல்
- மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி
- பங்குனி மாதம் மாங்கனித் திருவிழா