சங்கமித்ரா விரைவுத் தொடருந்து
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சங்கமித்ரா விரைவுத் தொடருந்து (தமிழ்), Sanghamitra Express (ஆங்கிலம்) ಸಂಗಮಿಥ ಎಕ್ಸ್ಪ್ರೆಸ್ (கன்னடம்) | |||
---|---|---|---|
பாட்னா சந்திப்பில் சங்கமித்ரா விரைவுத் தொடருந்து | |||
கண்ணோட்டம் | |||
வகை | இந்தியாவின் அதிவிரைவுத் தொடருந்துகள் (All LHB Rakes) | ||
நிகழ்வு இயலிடம் | கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மற்றும் பீகார் | ||
முதல் சேவை | சனவரி 1, 1988 | ||
நடத்துனர்(கள்) | தென் மேற்கு ரெயில்வே துறை | ||
வழி | |||
தொடக்கம் | பெங்களூரு நகர இருப்பூர்தி நிலையம் | ||
இடைநிறுத்தங்கள் | 35 | ||
முடிவு | தானாபூர் (DNR) | ||
ஓடும் தூரம் | 2,698 km (1,676 mi) | ||
சராசரி பயண நேரம் | 48 மணி 5 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி சேவை | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் சமையலறை பெட்டி | ||
இருக்கை வசதி | வசதி உண்டு | ||
படுக்கை வசதி | வசதி உண்டு | ||
உணவு வசதிகள் | வசதி உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | அகலப்பாதை | ||
வேகம் | 56 km/h (35 mph) நிறுத்தங்களுடன் சராசரியாக அதிகபட்ச வேகமாக விஜயவாடா மற்றும் வாரங்கள் நிலையங்களுக்கு இடையே மணிக்கு சராசரியாக 110 கிலோமீட்டர் | ||
|
சங்கமித்ரா விரைவுத் தொடருந்து பெங்களூரு கிராந்தி வீர சங்கொலி ராயண்ணா நிலையத்திலிருந்து தினந்தோறும் இயக்கப்பட்டு பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள தானாபூர் நிலையம் வரை இயக்கப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மற்றும் பீகார் என பல்வேறு மாநிலங்களில் உள்ள வழியாக 2698 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணி நேரம் 5 நிமிடங்களில் வந்தடைகிறது. 12295UP மற்றும் 12296DN என்ற எண்களில் இயக்கப்படும் இந்தத் தொடருந்தானது இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் அதி விரைவுத் தொடருந்துகளில் ஒன்றாகும்.
பெயர்க்காரணம்
[தொகு]முற்காலத்தில் பாடலிபுத்திரம் என்ற நகரத்திலிருந்து மௌரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னனான பேரரசர் அசோகர் அவர்களின் மகளான சங்கமித்திரையை போற்றும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டது. பாடலிபுத்திரம் நகரமே தற்போது பாட்னா என அழைக்கப்படுகிறது. சங்கமித்திரை அதிவிரைவுத் தொடருந்து தென்மேற்கு ரயில்வே துறையினரால் இயக்கப்படும் மிகப்பெரிய தொலைதூர தினசரி தொடருந்தாகும்.
தொடருந்து வரலாறு
[தொகு]ஆரம்பத்தில் இந்தத் தொடருந்து, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மதியம் 13.30 மணிக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் இருப்பூர்தி நிலையம் இருந்து புறப்படும் பின்னர் 2001ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த தொடருந்து யஸ்வந்த்பூர் இருப்பூர்தி நிலையம் வரை நீட்டிக்கப்பட்டு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7 மணிக்கு 6595 மற்றும் 6596 என்ற எண்களின் கீழ் இயக்கப்பட்டது.
2013-ம் ஆண்டுகளில் பாடலிபுத்திர மற்றும் யஸ்வந்த்பூர் விரைவு தொடருந்துகாக இருப்புபாதை ஏற்படுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இவ்விரு நிலையங்களுக்கு இடையே தொடருந்து இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெங்களூரு நகர சந்திப்பு நிலையத்திலிருந்து பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு நிலையத்திற்கு சங்கமித்ரா அதிவிரைவு தொடருந்து ஒவ்வொரு நாளும் இயக்கப்பட்டு வருகிறது.
இழுவை இயந்திரம்
[தொகு]இந்த சங்கமித்ரா அதிவேக விரைவுத் தொடருந்து, பெங்களூர் முதல் சென்னை வரை ராயபுரம் இருப்பூர்தி நிலையத்தால் பராமரிக்கப்படும் WAP7 இழுவை இயந்திரத்தின் மூலம் இழுத்து செல்லப்படுகிறது. சென்னை முதல் ஜபல்பூர் நிலையம் வரை ஜபல்பூர் இருப்பூர்தி நிலையத்தால் பராமரிக்கப்படும் WAP5 இழுவை இயந்திரம் அல்லது துக்ளகாபாத் இருப்பூர்தி நிலையத்தால் பராமரிக்கப்படும் WAP7 இழுவை இயந்திரத்தால் இழுத்துச் செல்லப்படுகிறது. அதன்பின்பு ஜபல்பூர் நிலையம் முதல் தானாபூர் நிலையம் வரையில் மத்திய பிரதேசம் மாநிலம் இட்டரசி நிலையம் மூலம் பராமரிக்கப்படும் WDP4D என்ற இழுவை இயந்திரத்தால் இழுத்துச் செல்லப்படுகிறது.
பயணத்திட்டம்
[தொகு]இந்தத் அதி விரைவு தொடருந்தானது இருவழிகளிலும் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. 12225 என்ற எண்ணின் கீழ் இயக்கப்படும் சங்கமித்ரா அதி விரைவு தொடருந்து தினமும் பெங்களூரு நகர சந்திப்பிலிருந்து காலை 9 மணிக்கு இயக்கப்பட்டு பங்காருபேட்டை, குப்பம், ஜோலார்பேட்டை, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம், சென்னை சென்ட்ரல், நெல்லூர், வாரங்கல், ஓங்கோல், விஜயவாடா சந்திப்பு, கம்மம், ராமகுண்டம், நாக்பூர், இட்டரசி சந்திப்பு ஜபல்பூர் மற்றும் மிர்சாபூர் என 36 நிறுத்தங்களை கடந்து 2699 கிலோமீட்டர் மணிக்கு 56 கிலோமீட்டர் வீதம் பயணம் செய்து மூன்றாம் நாள் காலை 09.05 மணிக்கு பீகார் மாநிலத்திலுள்ள தானாபூர் நிலையத்தை அடைகிறது.
மறுமார்க்கமாக 12226 தினந்தோறும் தானாபூர் நிலையத்திலிருந்து மாலை 08.10 மணிக்கு இயக்கப்பட்டு 36 நிறுத்தங்களைக் கடக்க 48 மணி 10 நிமிடங்களை எடுத்துக்கொண்டு மூன்றாம் நாள் மாலை 08.20 மணிக்கு பெங்களூரு நகர சந்திப்பை வந்தடைகிறது.
பயணப் பெட்டிகளின் அமைப்பு
[தொகு]ஈரடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட மூன்று பெட்டிகள் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட நான்கு பெட்டிகள், பத்து முன்பதிவு மற்றும் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு பொது வகுப்பு பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டி மற்றும் ஒரு சமையறைப் பெட்டி என மொத்தம் இருபத்தி இரண்டு (22) பெட்டிகள் இந்த அதிவிரைவுத் தொடருந்தில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
EOG | GS | S1 | S2 | S3 | S4 | S5 | S6 | S7 | S8 | S9 | S10 | PC | B1 | B2 | B3 | B4 | A1 | A2 | A3 | GS | EOG |