க. மணிமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. மணிமாறன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலியில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். தாமிரபரணி அச்சன்கோவில் பாறை நகர்வு மண்டல ஆய்விற்காகக் கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். சுனாமி ஆய்வுக் கட்டுரைகளுக்காகத் தமிழ்நாடு அரசின் 2006 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது பெற்றவர். இவரும் கி. ரேணுகாவும் இணைந்து எழுதிய “பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் சு. இராசரத்தினம் எழுதிய பண்பாடு வேரும் விழுதும் எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது)

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._மணிமாறன்&oldid=3614118" இருந்து மீள்விக்கப்பட்டது