உள்ளடக்கத்துக்குச் செல்

சு. இராசரத்தினம் (கனடா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. இராசரத்தினம் என்பவர் ஒரு கனடா எழுத்தாளர். கனடாவில் 19 ஆண்டுகள் சமூக சேவையிலும், தமிழ் மொழி கற்பித்தலிலும் ஈடுபாடு கொண்டு விளங்குபவர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்காகப் பல்வேறு பாடநூல்களை எழுதியிருக்கிறார். இவரது “தமிழீழம் நாடும் அரசும்” மக்கள் வரவேற்பைப் பெற்ற நூல். இவர் எழுதிய “பண்பாடு ; வேரும் விழுதும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் முனைவர் க. மணிமாறன் , கி. ரேணுகாவிடன் இணைந்து எழுதிய பண்பாடு வேரும் விழுதும் எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விதிகளின்படி, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பரிசு பெறும் நிலையில் அவர்களுக்குச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பெறும். இதன்படி இவருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._இராசரத்தினம்_(கனடா)&oldid=4043631" இலிருந்து மீள்விக்கப்பட்டது