க. குணராசா
செங்கை ஆழியான் | |
|---|---|
| பிறப்பு | க. குணராசா சனவரி 25, 1941 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
| இறப்பு | பெப்ரவரி 28, 2016 (அகவை 75) நீராவியடி, யாழ்ப்பாணம் |
| இறப்பிற்கான காரணம் | இயற்கை |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| மற்ற பெயர்கள் | சென்கை ஆழியான் |
| கல்வி | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழககம் |
| பணி | உதவி அரச அதிபர் |
| அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
| சமயம் | இந்து |
| பெற்றோர் | கந்தையா, அன்னம்மா |
| வாழ்க்கைத் துணை | கமலாம்பிகை |
| பிள்ளைகள் | ரேணுகா, பிரியா, ஹம்சா |
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியில் பிறந்தார்.[1] யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்
இவருடைய ஆக்கங்கள்
[தொகு]தொடர் கதை
[தொகு]ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
திரைப்படம்
[தொகு]இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.
புதினங்கள் மற்றும் குறும் புதினங்கள்
[தொகு]- நந்திக்கடல்
- சித்திரா பௌர்ணமி
- ஆச்சி பயணம் போகிறாள்
- முற்றத்து ஒற்றைப் பனை
- வாடைக்காற்று
- காட்டாறு
- இரவின் முடிவு
- ஜன்ம பூமி
- கந்தவேள் கோட்டம்
- கடற்கோட்டை
சிறுவர் புதினங்கள்
[தொகு]- பூதத்தீவுப் புதிர்கள்
- ஆறுகால்மடம்
வரலாற்று நூல்கள்
[தொகு]- யாழ்ப்பாண அரச பரம்பரை
- நல்லை நகர் நூல்
- 24 மணிநேரம்
- மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
ஆய்வு நூல்கள்
[தொகு]- ஈழத்துச் சிறுகதை வரலாறு
தொகுப்புக்கள்
[தொகு]- மல்லிகைச் சிறுகதைகள் - 1
- மல்லிகைச் சிறுகதைகள் - 2
- சுதந்திரன் சிறுகதைகள்
- மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
- ஈழகேசரிச் சிறுகதைகள்
- முனியப்பதாசன் கதைகள்
- ஆயிரமாயிரம் ஆண்டுகள்
புவியியல்
[தொகு]- அடிப்படைப் புவியியல் உலகம் இலங்கை
- இலங்கைப் புவியியல்
பிற
[தொகு]- நல்லை நகர் நூல்
- ஈழத்தவர் வரலாறு
படைப்புக்கள்
- 12 மணி நேரம்
- 24 மணி நேரம்
- The Jaffna Dynasty
- அக்கினி
- அக்கினிக் குஞ்சு
- அடிப்படைப் புள்ளிவிபரவியல்
- அடிப்படைப் புவியியல்
- அபிவிருத்திப் புவியியல் (1985)
- அபிவிருத்திப் புவியியல் (1988)
- அபிவிருத்திப் புவியியல் (1992)
- அபிவிருத்திப் புவியியல் (1994)
- அபிவிருத்திப் புவியியல் இந்தியா
- அலையின் கீதம்
- ஆச்சி பயணம் போகிறாள்
- ஆயிரமாயிரம் ஆண்டுகள்
- ஆய்ந்தறிதல் திறன்
- ஆரம்பப் புவியியல் எட்டாம் வகுப்புக்குரியது: உலகம் இலங்கை பாடப்பயிற்சி
- ஆரம்பப் புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது
- ஆறாந்தரப் படவேலை சமூகக்கல்வி
- ஆறுகால்மடம்
- இடவிளக்கவியற் படங்கள்
- இந்தியத் துணைக்கண்டப் புவியியல்
- இரவு நேரப் பயணிகள்
- இலங்கை சுருக்க வரலாறு (கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் 2007 வரை
- இலங்கைச் சுருக்க வரலாறு
- இலங்கைப் புவியியல்
- இலங்கைப் புவியியல் (1988)
- இலங்கைப் புவியியல் (1995)
- இலங்கைப் புவியியல் 1965
- இலங்கைப் புவியியல் 1973
- இலங்கைப் புவியியல் 1994
- இலங்கையின் புவிச்சரிதவியல்
- ஈழகேசரிச் சிறுகதைகள்
- ஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)
- ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
- ஈழத்துச் சிறுகதை வரலாறு
- ஈழராஜா எல்லாளன்
- உலகப் புவியியல்
- உலகப் புவியியல் (1972)
- எச்சாட்டி அம்மன் ஆலய வரலாறு
- எட்டாந்தரப் படவேலை சமூகக்கல்வி
- எஸ். ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம் 1878: ஓர் மீள்வாசிப்பு
- ஏன் எப்படி எவரால்
- ஏழாந்தரப் புவியியற் படவேலை
- ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
- ஐக்கிய இராச்சியம்
- ஐக்கிய இராச்சியம் (1989)
- ஒரு மைய வட்டங்கள்
- ஓ அந்த அழகிய பழைய உலகம்
- கங்கைக்கரை ஓரம்
- கடல் கோட்டை
- கதைப் பூங்கா
- கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள்
- களம் பல கண்ட யாழ் கோட்டை
- காட்டாறு
- காற்றில் கலக்கும் பெருமூச்சுகள்
- காவோலை
- கிடுகு வேலி
- கிரகித்தல்
- கிரகித்தல் (1989)
- குந்தி இருக்க ஒரு குடிநிலம்
- குவேனி
- கூடார வாழ்க்கை
- கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும்
- கொத்தியின் காதல்
- கொழும்பு லொட்ஜ்
- சந்திரனின் கதை
- சமூகக்கல்வி: தரம் 10
- சமூகக்கல்வி: தரம் 10 (1978)
- சாம்பவி
- சிங்களச் சிறுகதைகள்
- சித்திரா பௌர்ணமி
- சுதந்திரன் சிறுகதைகள்
- சுனாமி கடற்கோள் 26/12 (2004)
- சுருட்டுக் கைத்தொழில்
- சுற்றாடற் புவியியல்
- சுற்றாடற் புவியியல் (2007)
- சுற்றாடற் புவியியல் 1995
- சுற்றுச் சூழலியல்
- சூரியனின் கதை
- சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
- சூழலியல்
- சூழலியல் (2002)
- செய்கைமுறைப் படவேலை
- செய்கைமுறைப் படவேலை (1967)
- செய்கைமுறைப் படவேலை (1978)
- ஜன்ம பூமி
- ஞாயிற்றுத் தொகுதி
- தீம்தரிகிட தித்தோம்
- தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள்
- நடந்தாய் வாழி வழுக்கியாறு
- நந்திக் கடல்
- நல்லூர்க் கந்தசுவாமி கோயில்
- நல்லை நகர் நூல்
- நானும் எனது நாவல்களும்
- நுண்ணறிவு (குணராசா, க.)
- படம் வரைகலை
- படவரைகலையில் எறியங்கள்
- படவரைகலையில் எறியங்கள் (1965)
- படவரைகலையில் எறியங்கள் (1999)
- படவேலை
- பனங்கூடல்
- பிரபஞ்சம்
- பிரளயம்
- பிரித்தானிய தீவுகளின் புவியியல்
- புதிய சமூகக்கல்வி பயிற்சிகள் ஆண்டு 10 (வினா விடைகள்)
- புதிய புவியியல் - இலங்கை
- புதிர்கள்
- புள்ளிவிபரப் படவரைகலையியல்
- புவியியல் தரம் 6 (மாதிரி வினாவிடை)
- புவியியல் தேசப்படத் தொகுதி
- புவியியல் தேசப்படத் தொகுதி (1987)
- புவியியல் தேசப்படத் தொகுதி (1993)
- புவியியல் புள்ளிவிபரவியல்
- புவியியல் வழிகாட்டி
- புவிவெளியுருவவியல்
- புவிவெளியுருவவியல் (1978)
- பூதத்தம்பி
- பூதத்தீவுப் புதிர்கள்
- பூமித்தாய்
- பூமியின் கதை
- பெளதிகச் சூழல் நிலவுருவங்கள்
- பெளதிகச் சூழல் நிலவுருவங்கள் (1994)
- பெளதீகச்சூழல் காலநிலையியல்
- பொது அறிவு (1993)
- பொது அறிவு (குணராசா, க.)
- பொது அறிவு: பகுதி 2
- பொது அறிவுச் சோதனை
- பொது உளச்சார்பு
- பொது உளச்சார்பு (1990)
- பொது விவேகப் பயிற்சிகள்
- பொருளாதாரப் புவியியல்
- பொருளாதாரப் புவியியல் (1972)
- பொருளாதாரப் புவியியல் (1975)
- போரே நீ போ
- பௌதிகச் சூழல் காலநிலையியல் 1979
- பௌதிகச் சூழல் காலநிலையியல் 1984
- பௌதிகச் சூழல் நிலவுருவங்கள் 1982
- பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம்
- பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம் (1968)
- பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம் (1975)
- பௌதீகப் புவியியல் 2
- மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
- மண்ணின் தாகம்
- மறுமலர்ச்சிக்கதைகள்
- மல்லிகைச் சிறுகதைகள்
- மல்லிகைச் சிறுகதைகள் 2
- மழைக்காலம்
- மழைக்காலம் (1988)
- மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
- மாணவர் இலகு தேசப்படத் தொகுதி
- மானிடப் புவியியல்
- மானிடப் புவியியல் (1997)
- மானிடப்புவியியல்
- மாமன்னன் சங்கிலியன்
- மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
- மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (2003)
- மீண்டும் வருவேன்
- முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள்
- முற்றத்து ஒற்றைப்பனை
- மெல்ல இருள் இனி விலகும்
- யாககுண்டம்
- யானை
- யானை (1991)
- யாழ்ப்பாண அரச பரம்பரை
- யாழ்ப்பாண தேசம்
- யாழ்ப்பாண வைபவமாலை
- யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு
- யாழ்ப்பாணச் சரித்திரம் 1912: ஒரு மீள்வாசிப்பு
- யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமி
- யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
- யாழ்ப்பாணம் பாரீர்
- யுத்த பூமி
- ருத்திர தாண்டவம்
- வரலாறு: ஆண்டு 11
- வரலாறும் சமூகக் கல்வியும் பட வேலை பயிற்சிகள்: ஆண்டு 11
- வற்றா நதி
- வாடைக்காற்று
- வானும் கனல் சொரியும்
- விடியலைத் தேடி
- விமான ஒளிப்படங்கள்
- விமான ஒளிப்படங்கள் (1997)
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ உதயன் 2016.03.01 - பக். 25.
