கோவை கோரா பருத்திப் புடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவை கோரா பருத்தி
குறிப்புகோவையில் தயாரிக்கப்படும் புடவைகள்
வகைகைத்தொழில்
இடம்கோவை, தமிழ்நாடு
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2014-15
பொருள்பருத்தி, பட்டு
மாங்காய் வடிவ முந்தி

கோவை கோரா பருத்தி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட ஒரு புடவை வகை ஆகும்.[1][2] இது 2014-15ஆம் ஆண்டில் ஒரு புவியியல் அடையாளமாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3][4]

கோவை கோரா பருத்தி[தொகு]

கோவை கோரா பருத்தி புடவை, பட்டும் பருத்தியும் சேர்ந்த கலவையாகும்.[5] சிறந்த தரமான பருத்தி நூல் பாரம்பரிய பட்டுடன் கலக்கப்பட்டு கோரா புடவையை தயாரிக்கப்படுகிறது.[6] இந்தப் புடவைகள் வண்ணமயமான வடிவமைப்புடைய புடவைகளாக பயன்படுத்தப்படுகிறது. தேவைப்படும் வடிவமைப்புகளுக்கேர்ப்ப வண்ண பருத்தி மற்றும் பட்டு நூல்கள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி நெய்யப்படுகிறது. இதற்கான முந்தி தலைப்புகள் (பார்டர்கள) பின்னர் சேர்க்கப்படுகின்றன.

நெய்தல்[தொகு]

கோரா பருத்தி புடவைகள் பாரம்பரிய கைத்தறிகள் முலம் நெசவு செய்யப்படுகின்றன.[7] ஒவ்வொரு புடவையும் மூன்று நாட்கள் வரை நெய்யப்படுகின்றன. ஒரு புடவை நெய்ய நெசவாளர்களுக்கு 450 ரூபாய் முதல் (அமெரிக்க $ 7.00), 850 ரூபாய் (அமெரிக்க டாலர் 13) வரை வழங்கப்படும். தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாரம்பரிய நெசவுக் குடும்பங்களால்  இந்த புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை, கோரா பருத்தி புடவைகளின் முக்கிய உற்பத்தி இடமாக உள்ளது.

விற்பனை[தொகு]

தமிழக அரசு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 82 கூட்டுறவு சங்கங்களுக்கு கோவை கோரா பருத்தி ஆடை உற்பத்தியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளனர். கோரா பருத்தி புடவைகளின் விலை ரூ 800 (US $ 12) முதல் ரூ1,200 (US $ 19) வரை உள்ளது. கோரா பருத்தி புடவைகளின் விற்பனை கடந்த மூன்று தசாப்தங்களாக பெண்களின் இரசனை மாற்றத்தினால் விற்பணை குறைந்து வருகிறது. இளவண்ணப் பட்டு நிற புடவைகளுக்கு, அணியப்படும் இரவிக்கை அடர் வண்ணம் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.  மென்மையான பட்டு நிறச்சேலைகளை நெசவு செய்வதற்கான குறைந்த தேவைகளும் மற்றும் அதிக ஊதியங்களும், நெசவாளர்கள் பட்டு புடவைகளை நெசவு செய்வதற்கு வழிவகுத்தன. புவியியல் அடையாளக் குறியீட்டால்  2014-15 ஆம் ஆண்டில் 15% விற்பனை அதிகரித்தது. தமிழ்நாடு அரசு, அரசால் நிர்வகிக்கப்படும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம்  புடவைகளை விற்பனை செய்கிறது.[8]

போட்டி[தொகு]

பாரம்பரிய கைத்தறி மூலம் நெய்யப்படும் கோரா பருத்தி புடவைகளுக்கு, விசைத்தறி மூலம் நெய்யப்படும் மலிவான பருத்தி புடவைகள் போட்டியாக உள்ளன.[9] விசைத்தறி மூலம் நெய்யப்படும் புடவையின் விலை 400 முதல் 600 வரையும், கைத்தறி மூலம் நெய்யப்படும் புடவையின் விலை 900 க்கு இடையிலும், ஒரு புடவையின் விலை 1200 வரையும் உள்ளது. உற்பத்தியை மானியமாக வழங்குவதற்காக தமிழக அரசிடம்  இருந்து நெசவாளர்கள் அடிக்கடி உதவி கேட்டுள்ளனர்.

புவியியல் சார்ந்த குறியீடு[தொகு]

2014 ஆம் ஆண்டில் கோவா கோரா பருத்தி புடவைகளுக்கான புவியியல் குறியீட்டிற்காக தமிழக அரசு விண்ணப்பித்தது.[10] 2014-15ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசால், கோவை கோரா பருத்தி ஆடை புவியியல் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டது. .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Industry of Coimbatore". Coimbatore Corporation. Archived from the original on 30 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "31 ethnic Indian products given". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  3. "FE Editorial Indication of incompetence". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  4. "Geographical indication". Government of India. Archived from the original on 26 August 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  5. "Kovai Kora cotton gets GI tag". The Hindu. 9 July 2014. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kovai-kora-cotton-gets-gi-tag/article6190948.ece. 
  6. "Kovai Kora cotton sarees". sareez.com இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160203203446/http://www.sareez.com/blog/cotton-sarees/. 
  7. "Despite GI tag, Kora silk has no takers". Times of India. 24 April 2014. http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Despite-GI-tag-Kora-silk-has-no-takers/articleshow/47034268.cms. 
  8. "Cooptex sets itself Rs.13.50 cr. target for Deepavali season". The Hindu. 19 September 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/cooptex-sets-itself-rs1350-cr-target-for-deepavali-season/article7667414.ece. 
  9. "Hard times for handloom `kora' silk units". The Hindu. 15 September 2003. http://www.thehindubusinessline.com/2003/09/16/stories/2003091601841700.htm. 
  10. "GI tag: TN trails Karnataka with 18 products". Times of India. 29 August 2013. http://timesofindia.indiatimes.com/city/chennai/GI-tag-TN-trails-Karnataka-with-18-products/articleshow/6458268.cms.