கோவிந்தராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவிந்தராஜ் (பி. மார்ச் 3, 1966) ஒரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். திருப்பூரில் பிறந்தவர். சுப்பிரமணி, ராஜம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். மனஓசை, குதிரை வீரன் பயணம், தோழமை, புதிய பார்வை முதலிய இதழ்களில் 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் பல கதைகளை எழுதியுள்ளார். 'பசலை' என்னும் சிறுகதைத் தொகுப்பு 1994ஆம் ஆண்டு வெளியானது. தற்போது ஓமியோபதி மருத்துவராக உள்ளார். ஓமியோபதி தொடர்பான கட்டுரைகள் பலவற்றை ஹோமியோ நண்பன் என்னும் இதழில் எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தராஜ்&oldid=2621902" இருந்து மீள்விக்கப்பட்டது