கோர்னிலோவ் நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்னிலோவ் தமது அதிகாரிகளால் வாழ்த்தப்படுதல்

கோர்னிலோவ் நிகழ்வு (Kornilov Affair) அல்லது கோர்னிலோவ் இராணுவப் புரட்சி (Kornilov Putsch) என்பது உருசிய படைத்துறையின் அந்நாளைய தலைமைத் தளபதி ஜெனரல் இலாவர் கோர்னிலோவ் மேற்கொண்டதாகக் கூறப்படும் இராணுவப் புரட்சியைக் குறிப்பதாகும். 1917இல் அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையிலமைந்த உருசிய இடைக்கால அரசுக்கு எதிராக இந்த இராணுவ புரட்சி நடத்தப்பட்டது.

பின்னணி[தொகு]

1917 பெபரவரிப் புரட்சிக்குப் பின்னர் உருசிய மன்னராட்சி கலைக்கப்பட்டு மாற்று இடைக்கால அரசு உருவானது. இந்த அரசில் பல்வேறு இடதுசாரி அரசியல் கட்சிகளும் வலதுசாரி கட்சிகளும் பங்கேற்றன. சர்வாதிகார அடக்குமுறை சார் மன்னரின் ஆட்சிக்கு எதிராக இந்த இடைக்கால அரசு உரிமைகளை செயலாக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என மக்கள் எதிர்பார்த்தனர். பெப்ரவரிப் புரட்சிக்கு அடுத்த சில வாரங்களுக்கு இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே அரசு செயல்பட்டது. அரசு நிறைவேற்றிய சீர்திருத்தங்களை கண்டு அரசின் முதன்மை எதிர்ப்பாளரான லெனினே உருசியா "போராட்டம் நடைபெறுகின்ற அனைத்து நாடுகளிலும் சுதந்தரமானதாக" அறிவித்தார்.[1] இருப்பினும் இந்த துவக்ககால உற்சாகமும் மக்கள் ஆதரவும் வெகுகாலம் நீடிக்கவில்லை. முதல் உலகப்போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும் அந்தப் போரின் விளைவாக எழுந்த பொருளியல் தாக்கங்களாலும் மக்களிடையே எதிர்ப்பு எழத் தொடங்கியது. சூலை நாட்கள் எனப்படுகின்ற போராட்டங்களை அடுத்து ஒழுங்கு பேணுகின்ற வலிதான அரசுக்கான கோரிக்கையும் வலதுசாரி கருத்தாக்கங்களும் வலுப்பெறத் துவங்கின. இதற்கு முன்னிலை வகித்து கோர்னிலோவ் போன்ற படை அதிகாரிகள் படைத்துறை ஒழுங்கீனமே உலகப்போரில் எதிர்கொண்ட தோல்விகளுக்கு காரணமாக அவதானித்தனர். ஒழங்கீனமான முன்னணிப் படையினருக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பெப்ரவரிப் புரட்சியை அடுத்து படைவீரர்களுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். உருசியாவின் வணிக மற்றும் தொழிலதிபர்களிடையேயும் புதிய அரசு குறித்து கலக்கம் எழுந்தது; இடைக்கால அரசில் பங்கேற்ற அரசியல்வாதிகளிடத்தும் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் தேவைக்கு ஆதரவு வலுவாக இருந்தது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. A. Wood – The Russian Revolution 1861-1917, 2nd ed (1993) Routledge, New York p. 42.

மேற்படிப்பிற்கு[தொகு]

  • H. Asher – The Kornilov Affair: A Reinterpretation (1970) Russian Review XXIX
  • O. Figes – A People's Tragedy: The Russian Revolution 1891 -1924 (1996) Random House
  • A.F. Kerensky – The Catastrophe (1977) Milwood
  • R. Kowalski – The Russian Revolution 1917-1921 (1997) Routledge
  • J.L. Munck – The Kornilov Revolt: A Critical Examination of Sources and Research (1987) Aarhus University Press
  • R. Pipes- The Russian Revolution 1899-1919 (1990) Collins Harvill
  • J.N. Westwood – Endurance and Endeavour: Russian History 1812-1992 (1993) Oxford University Press
  • A. Wood – The Russian Revolution 1861-1917,(1993) Routledge, New York
  • G. Katkov – Russia 1917: The Kornilov Affair, (1980) Longman Group, United Kingdom
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்னிலோவ்_நிகழ்வு&oldid=2210348" இலிருந்து மீள்விக்கப்பட்டது