இலாவர் கோர்னிலோவ்
Appearance
இலாவர் ஜார்ஜியெவிச் கோர்னிலோவ் | |
---|---|
ஜெனரல் இலாவர் கோர்னிலோவ் 1916இல் | |
பிறப்பு | ஓஸ்கெமன் |
இறப்பு | கிராசுநோடர் அருகே |
சேவை/ | இம்பீரியல் உருசியப் படை வெள்ளை இயக்கம் |
சேவைக்காலம் | 1892-18 |
தரம் | ஜெனரல் |
போர்கள்/யுத்தங்கள் | உருசிய சப்பானியப் போர் முதல் உலகப் போர் உருசிய உள்நாட்டுப் போர் |
விருதுகள் | Order of St. George (twice) Order of Saint Anna Order of Saint Stanislaus |
இலாவர் ஜார்ஜியெவிச் கோர்னிலோவ் (Lavr Georgiyevich Kornilov, உருசியம்: Лавр Георгиевич Корнилов, பஒஅ: [ˈlavr kɐrˈnʲiləf]; 18 ஆகத்து 1870–13 ஏப்ரல் 1918) முதல் உலகப் போரின் போதும் தொடர்ந்த உள்நாட்டுப் போரின் போதும் இம்பீரியல் உருசியப் படையில் புலனாய்வு அதிகாரியாகவும் ஜெனரலாகவும் பணியாற்றியவர். இவர் ஆகத்து/செப்டம்பரில் அலெக்சாண்டர் கெரென்சுகியின் இடைக்கால அரசை வலுப்படுத்த எண்ணி தோல்வியுற்ற கோர்னிலோவ் நிகழ்விற்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசுத் தலைவர் கெரென்சுகி போல்செவிக்குகளால் சிறைபடுத்தப் பட்டுள்ளதாக தவறாக எண்ணி இவர் நிகழ்த்திய இராணுவ நடவடிக்கையால் இராணுவப் புரட்சி நிகழ்த்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வு கெரென்சுகியின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு மாற்றாக பலவீனப்படுத்தியது.[1]
மேற்சான்றுகள்
[தொகு]நூற்கோவை
[தொகு]- Richard Pipes, The Russian Revolution (Knopf, 1990)
- Orlando Figes, A People's Tragedy (Viking, 1996)
- Evan Mawdsley, The Russian Civil War (Birlinn, 2008)