கோரபுழா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரபுழா
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஅரிக்கன்குன்னி
 ⁃ ஏற்றம்610 m (2,000 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக் கடல்
நீளம்40 km (25 mi)
வடிநில அளவு624 km2 (241 sq mi)
கோரப்புழா சாலை பாலம்
கோரப்புழா தொடருந்து பாலம்

கோரபுழா ஆறு (Korapuzha) என்பது இலத்தூர் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் பாய்கிறது. கோரபுழா ஆறு 40 km (25 mi) நீளமுள்ள ஒரு குறுகிய ஆறாகும். இதனுடைய வடிநிலப் பகுதி சுமார் 624 km2 (241 sq mi) ஆகும். இது வயனாட்டு மாவட்டத்தில் உள்ள மலைகளில் உருவாகும், அகலாபுழா மற்றும் புன்னூர்புழா ஆகிய இரண்டு நீரோடைகளின் சங்கமத்தால் உருவாகிறது. கோரபுழா எலத்தூரில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆறும் இதன் முக்கிய துணைஆறுகளும் அரபிக்கடலுக்கு அருகில் இருப்பதால் அலைகளுடன் காணப்படுகிறது. இதனுடைய கடையோட்டப் பாதையான சுமார் 25 km (16 mi) பகுதியில் படகு போக்குவரத்து அதிகமாகக் காணப்படுகிறது. இது மேற்கு கடற்கரை உள்நாட்டு போக்குவரத்து அமைப்பின் ஒரு பகுதியாகும்.

கோரப்புழா பாலம்[தொகு]

கோரப்புழா பாலம் 480 மீட்டர் நீளமுடையது. இது கோழிக்கோடு மாவட்டத்தில் மிக நீளமான பாலமாகும். 1940-ல் கட்டப்பட்ட இப்பாலம் 13 இடைவெளிகளைக் கொண்டுள்ளது. இதன் சுற்றுப்புறம் பசுமையான தாவரங்களுடன் புகைப்படம் எடுக்கச் சிறந்த இயற்கைச் சூழல் பகுதியாக உள்ளது.[1]

கோராபுழா பொதுவாக முந்தைய மலபார் மாவட்டத்தில் வட மலபார் மற்றும் தெற்கு மலபார் இடையே உள்ள கார்டன் சானிடராக கருதப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டு வரை வட மலபாரின் நாயர் பெண்கள் கோரப்புழாவைக் கடந்து தெற்கே செல்வது அல்லது தென் மலபாரைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்பட்டது. இதனை மீறுபவர்கள் புறக்கணிக்கப்பட்டுச் சாதி அடையாளத்தினை இழந்தனர். இதேபோல திய்யா சமூகத்திலும் சில வேறுபாடுகளைக் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rivers of Western Ghats - The Korapuzha". Archived from the original on 25 June 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2006.

குறிப்புகள்[தொகு]

  • வில்லியம் லோகனின் இரண்டு தொகுதிகளில் மலபார் கையேடு, 1887 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது, 1951 இல் ஆசிய கல்விச் சேவைகளால் மறுபதிப்பு செய்யப்பட்டது.
  • 1901 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட எஃப். ஃபாசெட்டின் நாயர்ஸ் ஆஃப் மலபார் தொகுதி III .
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரபுழா_ஆறு&oldid=3934708" இலிருந்து மீள்விக்கப்பட்டது