கோமதி ஆறு
கோமதி ஆறு गोमती नदी | |
கோமதி ஆறு, லக்னோ
| |
நாடு | இந்தியா |
---|---|
உற்பத்தியாகும் இடம் | கோமதி ஏரி |
- அமைவிடம் | பிலிபித், நடு கங்கைச் சமவெளி |
- உயர்வு | 200 மீ (656 அடி) |
நீளம் | 900 கிமீ (559 மைல்) approx. |
Discharge | for சையதுபூர், வாரணாசி |
- சராசரி | |
கோமதி ஆறு (Gomati River) (இந்தி: गोमती Gomtī) கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்து தொன்மவியல் படி கோமதி ஆறு வசிட்டரின் மகளாக கருதப்படுகிறது. ஏகாதசி அன்று இவ்வாற்றில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும்.[1] பாகவத புராணத்தின் படி கோமதி ஆறு பரத கண்டத்தின் புனித ஆறுகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது..[2]இவ்வாற்றில் வைணவர்கள் போற்றும் சுதர்சன சக்கர வடிவத்தில் கற்கள் கிடைக்கிறது.[3]
நிலவியல்
[தொகு]கோமதி ஆறு, வடமேற்கு உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் உள்ள புல்கர்ஜீல் எனுமிடத்தில் உள்ள கோமதி ஏரியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கோமதி ஆறு உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, லக்கிம்பூர், சுல்தான்பூர், ஜௌன்பூர் வழியாக 900 கிலோ மீட்டர் பாய்ந்து, இறுதியில் வாரணாசி மாவட்டத்தின் செய்யதுபூர் எனுமிடத்தில் கங்கை ஆற்றில் கலக்கிறது.
நகரங்கள்
[தொகு]கோமதி ஆற்றாங்கரையில் லக்னோ, லக்கிம்பூர், சுல்தான்பூர், ஜௌன்பூர் போன்ற 15 நகரங்கள் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gomati River Expedition 2011". பார்க்கப்பட்ட நாள் 18 January 2013.
- ↑ "Bhaktivedanta VedaBase: Srimad Bhagavatam 5.19.17-18". 2010-01-04. Archived from the original on 2012-04-21. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
- ↑ "Magic SEA Underground: Magical Uses Of Gomti Chakra (Cat's Eye Shell)". liewsp1-magicsea.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sacred Rivers
- "Sewage kills thousands of fish in north Indian river". Babu Lal Sharma, Associated Press, August 22, 2003 பரணிடப்பட்டது 2006-03-01 at the வந்தவழி இயந்திரம்
- Markandey Mahadeo on Wikimapia
- Reference to Gomti River System