கோபால் கிருஷ்ண பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபால் கிருஷ்ண பிள்ளை
Gopal Krishna Pillai
இந்திய உள்துறைச் செயலர்
பதவியில்
30 சூன் 2009 – 30 சூன் 2011
முன்னையவர்மதுகர் குப்தா
பின்னவர்ராஜ்குமார் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 நவம்பர் 1949
கேரளம்
துணைவர்சுதா பிள்ளை
வேலைஅரசு ஊழியர் (இந்திய ஆட்சிப் பணி)

கோபால் கிருஷ்ண பிள்ளை (Gopal Krishna Pillai) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் இந்திய அரசின் முன்னாள் உள்துறைச் செயலாளரும் ஆவார். இவர் கேரளாவில் 30 நவம்பர் 1949 அன்று நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும், பெங்களூரு புனித வளனார் கல்லூரியிலும் கல்வியை முடித்துள்ளார். இதன் பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் முது அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1972ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வு மூலம் கேரள பணிநிலைப் பிரிவு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர்.

கேரளாவில் வகித்த பதவிகள்[தொகு]

  • 1982 முதல் 1985 வரை கொல்லம் மாவட்ட ஆட்சியர்
  • பாரம்பரிய தொழில்களான முந்திரி, தென்னை நார் மற்றும் கைத்தறி துறைகளுக்கான சிறப்பு செயலாளர்
  • சுகாதார செயலாளர்
  • கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_கிருஷ்ண_பிள்ளை&oldid=3794972" இலிருந்து மீள்விக்கப்பட்டது