உள்ளடக்கத்துக்குச் செல்

கோபர்தங்கா

ஆள்கூறுகள்: 22°52′N 88°46′E / 22.87°N 88.76°E / 22.87; 88.76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபர்தங்கா
நகரம்
கோபர்தங்கா ஜமீன்தார் இல்லம்
கோபர்தங்கா ஜமீன்தார் இல்லம்
கோபர்தங்கா is located in மேற்கு வங்காளம்
கோபர்தங்கா
கோபர்தங்கா
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் அமைவிடம்
கோபர்தங்கா is located in இந்தியா
கோபர்தங்கா
கோபர்தங்கா
கோபர்தங்கா (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°52′N 88°46′E / 22.87°N 88.76°E / 22.87; 88.76[1]
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
அரசு
 • வகைஇந்தியாவில் உள்ள நகராட்சிகளில் ஒன்று
 • நிர்வாகம்கோபர்தங்கா நகராட்சி
 • நகராட்சி தலைவர்Sankar Dutta[2]
பரப்பளவு
 • மொத்தம்13.50 km2 (5.21 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்45,377
 • அடர்த்தி3,400/km2 (8,700/sq mi)
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
மக்களவைத் தொகுதிபாங்காவ்ன் மக்களவைத் தொகுதி
இணையதளம்www.gobardangamunicipality.org

கோபர்தங்கா (Gobardanga) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சித் தலைமையிடமும் ஆகும். 20 ஏப்ரல் 1870 இல் நிறுவப்பட்டது, இது மேற்கு வங்காளத்தின் பழமையான நகராட்சிகளில் ஒன்றாகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

கோபர்தங்கா என்ற சொல் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது கோ-பார்-டங்கா என்ற மூன்று சொற்களைக் கொண்டுள்ளது. கோ என்றால் "உலகம்/பூமி", பார் என்றால் "மிகப்பெரியது" மற்றும் டங்கா என்பது "இடம்" என்று பொருள்படும், அதாவது பூமியின் மிகப் பெரிய இடம் .[சான்று தேவை][ விவரங்கள் தேவை ]

நிலவியல்

[தொகு]

அமைவிடம்

[தொகு]

கோபர்தங்கா ஜமுனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் 22.880149°N மற்றும் 88.760791°E அமைந்துள்ளது.

மீடியா, கோபர்தங்காவில் கன்கோனா பார்ஹ் என்ற குதிரை வில் ஏரி உள்ளது. இது திறந்த வாய் வளையல் வடிவ நீர்நிலை ஆகும். இந்த ஏரி பெண்கள் அணியும் கன்கோனை ஒத்திருக்கிறது, எனவே இது கன்கோனா பார்ஹ் என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான இடமாகும். குளிர்காலத்தில் ஏராளமான புலம்பெயர் பறவைகள் இங்கு வருகின்றன.  

பகுதி கண்ணோட்டம்

[தொகு]

வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ள பகுதி பெரும்பாலும் வடக்கு பித்யாதாரி சமவெளியின் ஒரு பகுதியாகும். கீழ் கங்கை டெல்டாவில் அமைந்துள்ளது. [4] இந்தப் பகுதியானது சமவெளிப் பகுதியாக அமைந்துள்ளது. இது வெள்ள மட்டத்திலிருந்து சற்று உயரமாக உள்ளது. ஆற்றுக் கால்வாய்களின் நில எல்லைகளை விடவும் உயரமாக அமைந்துள்ளது. [5] 54.67% மக்கள் மக்கள் அதிக மக்கள் அடர்வு கொண்ட நகர்ப்புறங்களிலும், 45.33% பேர் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர். [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maps, Weather, and Airports for Gobardanga, India". fallingrain.com.
  2. "Official Granted Chairman". Archived from the original on 24 August 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. "Gobardanga City".
  4. "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (PDF). Page 13. Directorate of Census Operations, West Bengal. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  5. Bengal District Gazetteers: 24 Parganas. Concept Publishing Company. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
  6. "District Statistical Handbook". North 24 Parganas 2013, Tables 2.1, 2.2, 2.4b. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. Archived from the original on 21 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபர்தங்கா&oldid=4108470" இலிருந்து மீள்விக்கப்பட்டது