உள்ளடக்கத்துக்குச் செல்

கோதிக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரம்ப கோதிக் கலைப்பாணி சிற்பங்கள்.

கோதிக் கலை (Gothic art) என்பது மத்திய கால கலைப் பாணி ஆகும். இது 12 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வளர்ச்சியடைந்தது. இது மேற்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பன்னாட்டு கோதிக் பாணியான வளர்ந்து, 15 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. சில இடங்களில், குறிப்பாக செருமனியில் 16 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. கோதிக் கால முதன்மை ஊடகமாக சிற்பம், மேற்பரப்பு ஓவியம், வண்ணப்பூச்சு கண்ணாடி, சுதை ஓவியம், ஒளியூட்டப்பட்ட சுவடிகள் ஆகியன காணப்பட்டன.

ஆரம்பம்

[தொகு]

கோதிக் கலை பிரான்சின் இல் ட பிரான்சுவில் 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புனித டெனிசு கன்னியர் மடக் கோயிலில் ஆரம்பமாகியது.[1] இப்பாணி விரைவாக அதன் மூலமான கட்டடக்கலையில் இருந்து சிலை (சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை), நெசவுக் கலை, ஓவியத்தின் பல வடிவங்களில் குறிப்பாக சுதை ஓவியம், வண்ணப்பூச்சு கண்ணாடி, ஒளியூட்டப்பட்ட சுவடி, மேற்பரப்பு ஓவியம் ஆகியவற்றில் பரவியது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gothic art
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gothic painters
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள்

[தொகு]
  1. Stokstad (2005), 516.
  2. Stokstad (2005), 544.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதிக்_கலை&oldid=3485729" இலிருந்து மீள்விக்கப்பட்டது