கோணமூக்கு உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோணமூக்கு உள்ளான்
இங்கிலாந்தில் ஒரு கோணமூக்கு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஏவ்சு
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Recurvirostridae
பேரினம்: Recurvirostra
இனம்: R. avosetta
இருசொற் பெயரீடு
Recurvirostra avosetta
இலினேயசு, 1758
Range of R. avosetta

     Breeding      Resident      Non-breeding

கோணமூக்கு உள்ளான் (pied avocet - Recurvirostra avosetta) என்பது ஒரு பெரிய கருப்பு வெள்ளை கரையோரப் பறவை ஆகும். இவை மிதவெப்பமண்டல ஐரோப்பிய, மேற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகள், உருசிய தூரக்கிழக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஒரு வலசை போகும் பறவை இனம் ஆகும். மேலும் இவை குளிர்காலம் முழுவதையும் ஆப்பிரிக்க மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் கழிக்கின்றன.[2]

வகைப்பாட்டியல்[தொகு]

கோணமூக்கு உள்ளான் கரோலஸ் லின்னேயஸ் எழுதிய முக்கியமான நூலான இசுசிசுடமா நாடுரே (Systema Naturae)வில் விவரிக்கப்பட்ட பல பறவை இனங்களில் ஒன்றாகும் .இப்பறவை அவோசெட்டா என்ற வெனிசியச் சொல்லிலிருந்து அதன் ஆங்கில மற்றும் அறிவியல் பெயர்களைப் பெறுகின்றது.

விளக்கம்[தொகு]

நெதர்லாந்தின் டெக்சல் தீவில் உள்ள ஓஸ்டரென்ட் அருகே ஒரு குஞ்சு
இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்குகிறது

இப்பறவை கௌதாரியைவிட அளவில் பெரியது. கருப்பும் வெண்மையுமான தோற்றம் கொண்ட இப்பறவையின் அலகு மேல்நோக்கி வளைந்து கருப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் நீண்டு இருப்பதைக் கொண்டு மற்ற உள்ளான்களில் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறியலாம். விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் நீலங் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இது தோராயமாக 16.5–17.75 அங்குலம் (41.9–45.1 செமீ) நீளம் கொண்டது, இதன் அலகு தோராயமாக 2.95–3.35 அங்குலம் (7.5–8.5 செமீ) நீளம் இருக்கும். கால்கள் தோராயமாக 3–4 அங்குலம் (7.6–10.2 செமீ) நீளம் இருக்கும். இதன் இறக்கைகள் தோராயமாக 30-31.5 அங்குலம் (76-80 செ.மீ) அகலம் இருக்கும்.[3] ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும்.

இவை பறக்கும்போது ச்கிலோயிட் என்ற ஒலிக்குறிப்பில் தொடர்ந்து பலமுறை கத்தும்.[3]

நடத்தை[தொகு]

கோண மூக்கு உள்ளான்கள் இணையாகவோ சிறு கூட்டமாகவோ காணப்படும். சேற்றில் ஓடியாடியும் ஆழமற்ற தீரில் இறங்கியும் இரைதேடும். மேல் நோக்கி வளைந்த அலகைக் கொண்டு தரையைக் கிளறி புழுப்பூச்சிகளை வெளிப்படுத்திப் பிடிக்கும். வாத்துபோல நீரில் மிதந்து நீந்தி இரைதேடுவதும் உண்டு. இவை பூச்சிகள், சிறிய நீர் ஓட்டுமீன்கள் (Crustaceans) , சிறிய மீன்கள், நீர்வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றை உணவாக்கிக் கொள்ளும்.[4][5]

கூடு[தொகு]

இவ்வகை உள்ளான்ங்கள் தங்களின் கூடுகளை மண், சேறு மற்றும் சிறிய தாவரங்களை வைத்து தரையில் அமைக்கும். ஒரே குடியேற்றத்தினுள் அமைக்கப்படும் கூடுகள் பெரும்பாலும் ஒரு மீட்டர். தொலைவில் இருக்கும். இவை மூன்று முதல் ஐந்து முட்டைகளை குடுகளில் இடும். இனப்பெருக்க காலத்தின் போது ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்தே இருக்கும்.[5]

Gallery[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Recurvirostra avosetta
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணமூக்கு_உள்ளான்&oldid=3772689" இருந்து மீள்விக்கப்பட்டது