கோட்டி, ஐதராபாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டி
புறநகர் பகுதி
மகாத்மா பேருந்து நிலையம்
மகாத்மா பேருந்து நிலையம்
நாடு India
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
Metroஐதராபாத்து பெறுநகர மண்டலம்
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500 095
வாகனப் பதிவுடிஎஸ்
மக்களவைத் தொகுதிஐதராபாத்து
சட்டப்பேரவைத் தொகுதிமகாராஜ்குஞ்
திட்ட முகமைபெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
இணையதளம்telangana.gov.in

கோட்டி (அல்லது கோத்தி ) (Koti (or Kothi) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஐதராபாத்தின் சிறந்த வணிகச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இங்கு கிங் கோட்டி மற்றும் ராம் கோட்டி. என இரண்டு பகுதிகள் உள்ளன:

வரலாறு[தொகு]

பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஜேம்ஸ் அகில்லெஸ் கிர்க்பாட்ரிக் என்பவருக்குச் சொந்தமான இது விக்டோரியன் மற்றும் கொறிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டில், உசுமானியா பல்கலைக்கழக பெண்களுக்கான கல்லூரி வளாகமாக மாற்றப்பட்டது.[1]

பின்னணி[தொகு]

இந்த மாளிகை முதலில் கமல் கான் என்ற பிரபுவிற்கு சொந்தமாக இருந்தது. பின்னர் ஐதராபாத்து ராச்சியத்தின் நிசாம் மீர் ஓசுமான் அலி கான் என்பாருக்கு சொந்தமானது. நிசாம் 1911 இல் அரியணை ஏறிய பிறகு சௌமகல்லா அரண்மனையில் வாழ்ந்த அவரது தந்தையைப் போலல்லாமல் இந்த அரண்மனையில் வசித்து வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The state's care of King Kothi Palace and its Purdah Gate has led to a denigration of its landmark beauty— but look forward to an overhaul - The Hindu".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டி,_ஐதராபாத்து&oldid=3924907" இலிருந்து மீள்விக்கப்பட்டது